நடிகர் தனுஷ், கோலிவுட் மற்றும் பாலிவுட்டை தாண்டி தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். கடைசியாக, இவர் பிரபல வெளிநாட்டு நடிகர்களான ரயான் காஸ்லிங், க்ரிஸ் எவன்ஸ் ஆகியோர் நடித்திருந்த தி கிரே மேன் படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். இவர், 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட்டில் ராஞ்சனா எனும் படத்தில் நடித்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஞ்சனா வெளியாகி 10 வருடங்கள் நிறைவு..


காதல்-அரசியல்-சண்டை என பல வகையான உணர்வுகள் கலந்து எடுக்கப்பட்டிருந்த படம், ராஞ்சனா. இதை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலமாகத்தான் தனுஷ் பாலிவுட்டிற்குள் நுழைந்தார். அதுவும், இதில் ஹீரோவாகவே நடித்திருந்தார். இந்த படம், தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியாகியிருந்தது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் நடித்திருந்தார். இவர்களைத்தவிர அபய் டியோல், ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளிவந்த புதிதில் பலருக்கு பிடிக்கவில்லை. ஆனால், அதன் பின்னர் பலர் இதனை விரும்பினர். படமும் வெளியான போது நல்ல ஹிட் அடித்தது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகின்றது. 


மெலும் படிக்க | OTT Releases: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை-இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள்..!


புதிய பாலிவுட் படத்தில் தனுஷ்..


நடிகர் தனுஷ், ராஞ்சனா படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராயுடன் சேர்ந்து புதிதாக ஒரு படத்தில் கைக்கோர்கிறார். இந்த படத்திற்கு தேரே இஷ்கு மெயின் (Tere Ishq Mein ) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராஞ்சனா படத்திற்கு இசையமைத்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அறிவிப்பினை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


ராஞ்சனா படத்தின் தாெடர்கதையா? 


ராஞ்சனா படத்தில் ஹீரேவாக வரும் தனுஷின் கதாப்பாத்திரம் க்ளைமேக்ஸில் காேமாவிற்கு போவது போல காட்சிப்படுத்தி இருப்பார். இந்த படத்தில் காதல் வசனங்களை தாண்டி அரசியல் வசனங்களும் இடம் பெற்றிருக்கும். ஹீரோவும் ஹீரோவுடன் இருப்பவர்களும் அரசுக்கு எதிராகவும் வன்முறைக்கு எதிராகவும் குரல் கொடுப்பவர்களாக இருப்பர். கடைசியில் ஹீரோவின் கதாப்பாத்திரம் கோமாவில் இருந்து எழுந்ததா இல்லையா என்பதை காண்பித்திருக்க மாட்டார்கள். தற்போது உருவாகிவரும் Tere Ishq Mein படம், ராஞ்சனா படத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால், இது அப்படத்தின் தொடர்கதையாக இருக்குமோ என பேசப்படுகிறது. 


பாலிவுட் வாரிசுகளுடன் நடித்த தனுஷ்..


தனது முதல் படமான ராஞ்சனாவில், தனுஷ் நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூருடன் நடித்தார். அடுத்து கடந்த 2021ஆம் அண்டு வெளியான அட்ராங்கி ரே என்ற படத்திலும் தமிழ் பையனாக நடித்திருந்தார், தனுஷ். இந்த படத்தில் இவருக்கு ஜாேடியாக பிரபல நடிகை சாரா அலிகானுடன் நடித்திருந்தார். இவர், பாலிவுட் ஸ்டார் சயிப் அலிகானின் மூத்த மகள் ஆவார். இவ்வாறு இரண்டு பாலிவுட் வாரிசுகளுடன் நடித்துவிட்ட தனுஷ், அடுத்த எந்த ஹீரோயினுடன் ஜோடி சேர உள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். 


கேப்டன் மில்லர்..


தனுஷ் கைவசம் தமிழிலும் பல படங்கள் உள்ளன. சானி காயிதம், ராக்கி ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாத்யூ இயக்கிவரும் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார். கன்னட நடிகர் சிவராஜ் குமார் சமீபத்தில்தான் கேப்டன் மில்லர் படத்தில் தனக்கான ஷூட்டிங்கை முடித்தார். தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் படங்களுள் கேப்டன் மில்லர் படமும் ஒன்று. 


மேலும் படிக்க | சமந்தா போல உடலை Fit -ஆக வைத்துக்கொள்வது எப்படி? ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ