வித்தியாசமான புகைப்படத்துடன் உலா வரும் டிடி!
தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வரும் தொகுப்பாளினி டிடி செய்த வித்தியாசமான வேலையை பாருங்க!
தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி நீலகண்டன் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். அவர் எந்த நிகழ்ச்சி வந்தாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும், அது ரசிக்கும் படியாகவும் இருக்கும்.
இதையடுத்து, பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும், காதலர் தின வெளியீடாக உலவிரவு என்ற ஆல்பம் ஒன்றிலும் அவர் நடித்து உள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில், மதன் கார்க்கி பாடல் வரிகளில் வெளியான இந்த ஆல்பம் பெரும் வரவேற்ப்பு பெற்றது.
இந்நிலையில், அண்மையில் அவர் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி அனைவரிடமும் பாராட்டுக்கள் பெற்றார். தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட டிடி இப்போது சிகாகோ சென்றுள்ளார். அங்கு 103வது மாடியில் படித்தபடி பயங்கர போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.