வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் 'வாரிசு' படத்தின் பணிகளில் நடிகர் விஜய் தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறார்.  தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில்  ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, யோகி பாபு, சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா போன்ற பலர் நடித்து வருகின்றனர். வாரிசு படம் பற்றிய அப்டேட்டுகள் அடிக்கடி வந்தாலும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பது என்னவோ 'தளபதி 67'தான்.  லோகேஷ் இயக்கத்தில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 67' படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் இருப்பதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியானது. வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்விராஜ் சுகுமாரன், சஞ்சய் தத் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இயக்குநர் கௌதம் மேனனும் படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.இதுதொடர்பான தகவலையும் கௌதம் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுத்திருப்பதால் விஜய்யுடன் லோகேஷ் இணையும் படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இதனையடுத்து அவர் 68 மற்றும் 69ஆவது படங்களுக்கான இயக்குநர் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. அதேசமயம், தற்போது விஜய்யின் 70ஆவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.



அதன்படி விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் 'தளபதி 70' படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனிக்கு '7' விருப்பமான எண் என்பதால் விஜய்யின் 70ஆவது படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கலாம் என தெரிகிறது.


மேலும் படிக்க | நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் - நாளை தொடங்குகிறது விசாரணை?


சென்னையை எப்போதும் தோனி தனது இரண்டாம் வீடு என்றே சொல்வார். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அவரே பல வருடங்களாக கேப்டனாக இருக்கிறார். தற்போது பாலிவுட்டில் படம் தயாரிக்காமல் தனது முதல் படத்தை கோலிவுட்டில் தயாரிப்பதன் மூலம் அவருக்கு தமிழ்நாடு மீது இருக்கும் பாசமும், அன்பும் வெளிப்பட்டிருப்பதாக தோனி ரசிகர்கள் சமுக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ