கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் முதல் முறையாக சால்ட் அண்டு பெப்பர் ஹேர் ஸ்டைலில் நடித்துள்ளார். துருவ நட்சத்திரம் டீஸர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க அமெரிக்காவில் தயாராகும் இந்தப் படத்தை கௌதமின் ஒன்றாக என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. டீசர் பார்த்த பலரும் ஹாலிவுட் படத்திற்கு நிகராக உள்ளதாக புகழ்ந்து தள்ளினர், இந்த டீசர் வெளிவந்த 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 43 ஆயிரம் பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட இப்படம் அதற்கு பிறகு தவிர்க்க முடியாத சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதன் பின்னர் தற்போது விக்ரமை வைத்து இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 டீசர்:-