போருக்கு உத்தரவிடுபவர்களை எல்லைக்கு அனுப்ப வேண்டும்- சல்மான் கான்
இந்தி நடிகர் சல்மான் கான், போருக்கு உத்தரவிடுபவர்களை எல்லைக்கு அனுப்ப வேண்டும் என பேசியுள்ளார்.
இந்தி நடிகர் சல்மான் கான் தன்னுடைய படத்தை பிரமோட் செய்யும் நிகழ்ச்சியில் பேசினார்:-
போருக்கு உத்தரவிடுபவர்களை எல்லைக்கு அனுப்ப வேண்டும், முதலில் சண்டையிட உத்தரவிட வேண்டும். அவர்களுடைய கை, கால்கள் நடுங்கும். போரானது ஒருநாளில் முடிந்துவிடும். பின்னர் அவர்கள் நாற்காலியில் இருந்து பேசுவார்கள்.
போரானது ஒருநாட்டிற்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. போர் நடந்தால் இருதரப்பு மக்களும் எல்லையில் உயிரிழப்பார்கள். பேச்சுவார்த்தை மற்றும் அமைதியே இருநாடுகளையும் முன்னெடுத்து செல்லும்
என சல்மான் கான் கூறியுள்ளார்.