கொரோனா தாக்கத்தினால் பெரிய அளவில் பல படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில்,  இந்த ஆண்டிலிருந்து பெரிய ஹீரோக்களின் பிரம்மாண்டமான படங்கள் வெளியானது.  விஜய் நடிப்பில் 'பீஸ்ட்', அஜித் நடிப்பில் 'வலிமை', ராம் சரண் & ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 'ஆர்ஆர்ஆர்' மற்றும் யாஷ் நடிப்பில் 'கேஜிஎஃப்-2' போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாகி சில கலவையான விமர்சனங்களை பெற்றது,  இருப்பினும் இப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்றது. பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியான வரிசையில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படமும் வெளியாகவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பாலிவுட் படத்தை பதம்பார்த்த ராக்கிபாய் - வசூல் சாம்ராஜ்ஜியம்


தற்போது பலரும் விக்ரம் படத்தை தான் எதிர்நோக்கி காத்துகொண்டு இருக்கின்றனர்.  லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காயத்ரி, ஷிவானி, மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, நரேன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.  கமல் ஏற்கனவே இந்த படத்தில் ஓய்வுபெற்ற போலீசாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது, 1986-ல் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் கமல் இந்த படத்தில் இளம் வயதினராக நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.



இந்த படத்தில் கமலை முப்பது வயது நபராக மாற்றும் தொழில்நுட்பத்திற்கு படக்குழு பத்து கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது.  இந்த தொழில்நுட்பம் சமீபத்தில் மார்ட்டின் ஸ்கோர்செஸ் இயக்கத்தில் வெளியான தி ஐரீஷ்மென் படத்தில் பயன்படுத்தப்பட்டது.  இதில் நடித்த ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அல் பசினோ மற்றும் ராபர்ட் டி நிரோ ஆகியோரின் வயதை குறைத்து இளமையாக காண்பிக்க இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர், தன் படத்தில் பலவித புதுமைகளை அறிமுகப்படுத்தும் கமல் தற்போது இந்த முறையை கையாண்டுள்ளார்.  ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜூன்-3ம் தேதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.


மேலும் படிக்க | கமல்- சூர்யாவை இணைக்கும் விக்ரம்- புதிய அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR