Anniyan Movie Child Actor Actor Viraj Vijay's Cousin News In Tamil: தமிழ் திரையுலகம், வளர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, சிறு குழந்தைகளுக்கும் ஏன் கைக்குழந்தைகளை கூட பிரபலமடைய செய்கிறது. அந்த வகையில், பலரும் பார்த்து பரீச்சியமான முகமாக இருப்பவர், விராஜ் என்ற நடிகர். இவர், 2005ஆம் ஆண்டு வெளியான அந்நியன் படத்தில் சிறு வயது விக்ரமாக நடித்திருப்பார். இவரை பற்றி யோசிக்கையில், “அப்போ அவாளுக்கெல்லாம் நரகத்துல என்ன தண்டனை பாட்டி” என்று இவர் அழுதுக்கொண்டே பேசும் டைலாக்தான் நினைவிற்கு வரும். தொடர்ந்து இவர் இன்னும் சில படங்களில் நடித்திருந்தாலும், பல வருடங்கள் கழித்து அவரை அருண் விஜய்யின் ஒரு படத்தில் பார்க்க முடிந்தது. இந்த நிலையில், இவர் நடிகர் விஜய்யின் தம்பி என பலர் பேசிக்கொள்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அருண் விஜய் படத்தில் குட்டி அம்பி…


ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருந்த படம் மிஷன் சேப்டர் 1. இந்த படம் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற படங்களுள், மிஷன் சேப்டர் 1 படமும் ஒன்று. இதில் எமி ஜாக்சன், நிமிஷா சஜ்ஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் தாமஸ் என்ற கதாப்பாத்திரமும் வரும். இந்த கதாப்பாத்திரத்தில்தான் இதுவரை குழந்தை நட்சத்திரமாக தோன்றி வந்த விராஜ் நடித்திருக்கிறார். இப்படம் தியேட்டரில் வெளியான போது இந்த கதாப்பாத்திரத்தையும் இதில் நடித்தவரையும் ரசிகர்கள் பெரிதும் கவனிக்கவில்லை. சமீபத்தில் இப்படம் ஓடிடியில் வெளியானது. இதையடுத்து பலரும் இவரது முகத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைரலாக்கி வருகின்றனர். 



மேலும் படிக்க | Meetha Raghunath: ‘குட் நைட்’ நாயகி மீதா ரகுநாத்திற்கு திருமணம் முடிந்தது! வைரல் போட்டோக்கள் இதோ..


யார் இந்த விராஜ்?


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகராகி இருக்கும் விராஜ்ஜின் இயற்பெயர், ஹரி பிரஷாந்த். இவரது தந்தை எச்.என் சுரேந்தர் டப்பிங் வாய்ஸ் கலைஞர். இவர், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபனா சந்திரசேகரின் சகோதரர் என கூறப்படுகிறது. இதன்படி, இவர் நடிகர் விஜய்க்கு தம்பி முறையாம். தனது தந்தையின் வாயிலாக,2000ஆம் ஆண்டு வெளியான உயிரிலே கலந்து எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இது, சூர்யா, ஜோதிகா, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருந்த படமாகும். இந்த படத்தை அடுத்து, தித்திக்குதே, உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக வந்தார். இதையடுத்து,அந்நியன் படத்தில் குட்டி அம்பியாக நடித்தார். இதையடுத்து, இவரை இன்னும் பெரிதாக பிரபலப்படுத்திய படம், Chennai 600028. 


2007 ஆம் ஆண்டுவெளியான சென்னை 600028 படத்தில் ஹீரோக்களுடன் பெட் மேட்ச் விளையாடி அதில் வெற்றி பெற்று அவர்களை துவம்சம் செய்யும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் வரும் காட்சிகள் பல தற்போது மீம் டெம்ப்ளேட்டுகளாகவும் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகம், 2016ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்திலும் அவர் சற்று வளர்ந்த இளைஞராக கடைசியில் கெஸ்ட் ரோலில் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. விராஜ், படங்களிலும் ஹீரோவாக நடிக்க முயற்சி செய்தார். ஆனால், அவர் நடித்த மொழிவது யாதெனில் என்ற படம் திரையரங்குகளில் வெளியாகாமலேயே போனது. 


மேலும் படிக்க | உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் ஆண்டனி பட நடிகை! என்ன ஆச்சு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ