Anirudh Porsche Car Worth: ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' திரைப்படம் நான்காவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. ஹெச்டி பிரிண்ட் இணையத்தில் வெளிவந்தாலும் திரையரங்கத்திற்கு வந்து படம் பார்க்கும் கூட்டம் மட்டும் குறையவேயில்லை. ரஜினிகாந்தின் மீதான கவர்ச்சியை மீண்டும் இந்திய திரையுலகமே வியந்து பார்த்து வருகிறது எனலாம். அந்த அளவிற்கு வசூல் ரீதியாக சாதனைகளை படைத்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் அதன் தயாரிப்பாளரும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி மாறன் ரஜினி, இயக்குநர் நெல்சன் ஆகியோருக்கு காரும், காசோலையையும் பரிசாக வழங்கியிருந்தார். அந்த வரிசையில் இசையமைப்பாளர் அனிருத்திற்கும் கார் மற்றும் காசோலையை பரிசாக வழங்கினார். குறிப்பாக இரண்டு கார்களை காண்பித்து, அதில் ஒன்றை அனிருத்தை தேர்வு செய்ய சொல்லி அதையே பரிசாக வழங்கினார். அதன் மூலம், போர்ஷே காரை அனிருத் பரிசாக பெற்றார். 


கலாநிதி மாறன், அனிருத் ரவிச்சந்தரை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து காசோலையை வழங்கினார். பின்னர், பிஎம்டபிள்யூ மற்றும் போர்ஷே காரில் ஒன்றை தேர்வு செய்யும்படி அனிருத்திடம் கூறினார். இசையமைப்பாளர் இரண்டு கார்களையும் பார்த்துவிட்டு போர்ஷே மக்கான் SUV காரைத் தேர்ந்தெடுத்தார், அது அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இந்த காரின் விலை சுமார் ரூ. 1.1 கோடி என தெரிவிக்கப்படுகிறது. 



மேலும் படிக்க | India vs Bharat: இத்தனை நாள் பெருமையாக இல்லையா... சேவாக்கிற்கு தமிழ் நடிகர் பதிலடி!


ரஜினியின் 'ஜெயிலர்' ஆகஸ்ட் 10ஆம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியது. அனிருத் ரவிச்சந்தரின் அற்புதமான பின்னணி இசைக்காகவும், பாடல்களுக்காக ரசிகர்கள் அவரை பாராட்டினர். குறிப்பாக, காவாலா பாடல் மற்றும் Hukum பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. 


முன்னதாக கலாநிதி மாறன், ரஜினிகாந்துக்கு படத்தின் லாபத்தில் ஒரு பங்கை வழங்கி ரூ. 1.26 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார் என தெரிவிக்கப்பட்டது. இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு காசோலை மற்றும் போர்ஷே காரும் பரிசாக வழங்கப்பட்டது.


நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம் இந்தாண்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களில் ஒன்றாகும். இப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடியை நோக்கி முன்னேறி வருவதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இதில் மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகியோர் சிறப்பு வேடங்களில் நடித்துள்ளனர். ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் பலர் துணை வேடங்களில் காணப்பட்டனர். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், படத்தொகுப்பாளர் நிர்மல் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவினர். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை ரூ. 200-240 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.


மேலும் படிக்க | இந்த வாரம் Netflix, Prime Video, Hotstar, Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள் & வெப் சீரியஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ