மலையாளத்தில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர், அல்போன்ஸ் புத்திரன். இவர், தனது சமூக வலைதள பக்கத்தில் திடுக்கிடும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அல்போன்ஸ் புத்திரன்:


மலையாளத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்களுள் ஒன்று, பிரேமம். நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். பள்ளி பருவத்தில் இருந்து 30 வயது ஆன நிலையிலும் தன் காதலில் வெற்றி பெறாமல் இருக்கும் ஒருவனுக்கு கடைசியில் எதிர்பாராத வகையில் காதல் அவன் கதவை தட்டுவதுதான் இப்படத்தின் கதை. இந்த படம், மலையாளம் மட்டுமன்றி இந்திய அளவிலேயே பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது. 2015ஆம் ஆண்டில் பிரேமம் வெளியாவதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டில் கோலிவுட்டில் வெளியான படம், நேரம். இந்த படத்திலும் நிவின் பாலிதான் ஹீரோவாக நடித்திருந்தார். இதனையும் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். 


குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருந்த படங்கள்தான் என்றாலும் நல்ல விமர்சனத்தை மக்கள் மத்தியில் பெற்றன. அல்போன்ஸ் புத்திரன், பிரேமம் படத்தை இயக்கிய பிறகு வேறு எந்த படங்களையும் இயக்கவில்லை. இதையடுத்து 2022 ஆம் ஆண்டில் கோல்ட் எனும் படத்தை இயக்கினார். ஆனால், இப்படம் இவரது படங்கள் போல நல்ல விமர்சனங்களையோ வசூலையோ பெறவில்லை. 


திரைப்படங்களை இயக்க போவதில்லை..


அல்போன்ஸ் புத்திரன் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்டரம் குறைபாடு இருப்பதாக கூறிப்பிட்டுள்ளார். இதனால், தான் இனி திரைப்படங்களை இயக்கப்போவதில்லை எனவும் ஓடிடி தளத்தில் குறும்படங்கள் இயக்குவதை தொடரப்போவதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தனக்கு சினிமாவில் இருந்து விலக வேண்டும் என்ற ஆசை இல்லை என்றும், தன் உடல் நிலை ஒத்துழைக்காததால் இந்த முடிவை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 


மேலும் படிக்க | அம்மாடியோ..ராகவா லாரன்ஸின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா..!


பதிவு டெலீட்..


அல்போன்ஸ் புத்திரனின் இந்த பதிவு தீயாக பரவியது. பல ரசிகர்கள் அதற்குள்ளாகவே இவர் குறித்து மீம்ஸ் பதிவுகளை போட ஆரம்பித்தனர். இதையடுத்து, சில மணி நேரங்களிலேயே அல்போன்ஸ் தனது பதிவினை பேஸ்புக்கில் இருந்து டெலீட் செய்து விட்டார். இதனால் தற்போது ரசிகர்கள் மத்தியில் “இந்த அறிவிப்பு உண்மையா இல்லையா..” என்ற குழப்பம் நிலவி வருகிறது. 


அல்போன்ஸ் புத்திரனின் உடல்நல குறைபாடு..


நேரம் மற்றும் பிரேமம் உள்ளிட்ட படங்களை இயக்கும் போது, அல்போன்ஸ் புத்திரன் நன்றாக இருந்தார். படம் இயக்காத 7 வருடங்கள் அல்போன்ஸ் புத்திரன் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இதையடுத்து, கோல்ட் படத்தை இயக்கும் போது உடல் மெலிந்து காணப்பட்ட இவரது நிலையை பார்த்த பலர் அதிர்ச்சிக்குள்ளாகினர். இவருக்கு போதை பழக்கம் இருந்ததாகவும் இதனால் அவருக்கு உடலில் பல பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


இயக்குநரை விமர்சித்த ரசிகர்கள்..


அல்போன்ஸ் புத்திரனின் அறிவிப்பை பார்த்து பலர் கண்கலங்க, ஒரு சிலர் அவரை விமர்சித்து வருகின்றனர். ஆட்டோகிராஃப் படத்தை பார்த்துதான் அவர் பிரேமம் படத்தையே இயக்கியதாகவும் 3 படங்களை இயக்கிவிட்டு பெரிய இயக்குநர் போல இது போன்ற பதிவுகளை அவர் வெளியிடுவதாகவும் சிலர் கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க | பிக்பாஸ் 7: எவிக்ட் ஆன யுகேந்திரன்-வினுஷாவிற்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ