கடந்த 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'தீனா' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக என்ட்ரியான ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.  விஜயகாந்தின் 'ரமணா', சிரஞ்சீவியின் 'ஸ்டாலின்', சூர்யாவின் 'கஜினி' மற்றும் '7 ஆம் அறிவு', அமீர்கானின் 'கஜினி' போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.  அடுத்ததாக விஜய்யை வைத்து 'துப்பாக்கி', 'கத்தி' மற்றும் 'சர்கார்' போன்ற ஹிட் படங்களை இயக்கினார்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து இவர் இயக்கிய 'தர்பார்' படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க |  ‘விஜய்- 66’ நடிகை இவர்தான்: கடைசி நேரத்தில் கன்ஃபார்ம்!


அதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 'தளபதி 65' படத்தை இயக்க முதலில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது,  ஆனால் சில காரணங்களால் அவர் இந்த ப்ராஜெக்டில் பங்குபெற முடியாமல் போக இறுதியாக நெல்சன் திலீப்குமார் இந்த திட்டத்தில் சேர்ந்தார்.  நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.  மேலும் இவர் சர்வதேச அளவிலான அனிமேஷன் ப்ராஜெக்ட் ஒன்றில் பணிபுரிவதாக சில செய்திகள் முன்னர் வெளியானது. 



இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் இரண்டு திரைக்கதைகளை முடித்துவிட்டதாகவும் அவற்றை இரண்டு ஆண்டுகளுக்குள் உருவாக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த இரண்டு கதைகளில் ஒன்றில் விக்ரம் கதாநாயகனாகவும், மற்றொரு கதையில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்', அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' மற்றும் மணிரத்னம் இயக்கத்தில்  'பொன்னியின் செல்வன்' ஆகிய மூன்று படங்களின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் இவரது 61-வது படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. 


அதேபோல நடிகர் விஜய் சேதுபதி தமிழ் படங்கள் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.  தற்போது இவர் நடிப்பில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', 'விக்ரம்', 'மெர்ரி கிறிஸ்துமஸ்', 'விடுதலை' மற்றும் 'மும்பைக்கர்' ஆகிய படங்கள் வெளியீட்டிற்காக உள்ளது.  விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரில் யாரை வைத்து  ஏஆர் முருகதாஸ் முதல் படத்தை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | கசிந்தது பீஸ்ட் கதை? ரசிகர்கள் அதிர்ச்சி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR