வர்மா படத்தில் இருந்து விலகியது ஏன் என்ற விளக்கத்தினை இயக்குநர் பாலா வெளியிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்க உருவான வர்மா திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு காரணம் இயக்குநர் பாலாவிற்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் கூறப்பட்டது, ஆனால் இதனை மறுத்து இயக்குநர் பாலா விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தெலுங்கு மொழில் அர்ஜூன் ரெட்டி என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைப்போட்ட திரைப்படத்தின் தமிழ் பதிப்பினை நடிகர் துருவ் நடிப்பில் தமிழில் வர்மா என்னும் பெயரில் B Studios நிறுவனம் தயாரித்தது. விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக இருதினங்களுக்கு முன்னர் படக்குழுவினர் அறிவித்தனர்.


தெலுங்கில் E4 Entertainment தயாரிக்க, இயங்குநர் சந்தீப் வங்கா இயக்கியிருந்தார். இப்படத்தினை தமிழில் வெளியிட விரும்பிய இந்நிறுவனம் இயக்குநர் பாலா தலைமையில் செயல்மடும் B Studios நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. ஒப்பந்தத்தின் படி இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்க தமிழில் வர்மா என்னும் பெயரில் உருவானது. வெளியீடு வரை இத்திரைப்படம் வந்த நிலையில் தெலுங்கு பதிப்பில் இருந்து தமிழ் பதிப்பு வேறுபட்டிருப்பதாக கூறி வர்மா படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... 



"தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.


படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. துருவ் விக்ரமின் எதிர்காலம் கருதி இதுகுறித்து மேலும் பேச விரும்பவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.


மேலும், தயாரிப்பாளர் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் அவர் வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.