இயக்குநர் லிங்குசாமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தி வாரியர்’ படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினினேனி ஹீரோவாக நடிக்க, நடிகை கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். நடிகை நதியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இதனையொட்டி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | AK61 அப்டேட்: ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி!


இதில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் பலர் கலந்து கொண்டனர். பாரதிராஜா, மணிரத்னம், ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், ஷங்கர், சிவா, பார்த்திபன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், விஷால், எஸ்.ஜே. சூர்யா, தேவி ஸ்ரீ பிரசாத், ஆர்யா, ஆதி, ராம்பொத்தினேனி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 



ராம்பொத்தினினேனி தெலுங்கில் பல ஹிட் கொடுத்திருக்கிறார் அவரை தமிழுக்கும் வரவேற்கிறோம் என ஆர்யா பேச்சைத் தொடங்க, அடுத்தாக விக்ரமன் பேசினார். அவருடைய பேச்சில் தான் கலகலப்பு தொடங்கியது. இயக்குநர் சங்க விழாவில் கூட இத்தனை இயக்குநர்களை நான் பார்த்து கிடையாது, இங்கு அத்தனை பேர் இருக்கிறார்கள். இயக்குநர்கள் சங்கம் சார்பாக தீர்மானம் நிறைவேற்ற இருந்தால் அனை இங்கே நிறைவேற்றிவிடலாம் எனக் கூறினார். அவருடைய பேச்சை ஆமோதித்த ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சங்கரை இயக்குநர்கள் சங்கத்தில் பார்க்கவே முடியாது எனக் கூறினார். அதனைக் கூறிவிட்டு விரைவில் பாரதி ராஜாவுக்கு மிகப்பெரிய விழா எடுக்க இருப்பதாக அறிவித்தார். 



மணிரத்னம் பேசும்போது, இயக்குநர்களை இணைக்கும் மையப்புள்ளியாக லிங்குசாமி இருப்பதாக கூறினார். வாரியர் முன்னாடி போங்க, நாங்க பின்னாடி வருகிறோம் என கலகலப்பாக கூறினார். ராம்சரண் படப்பிடிப்பில் இருந்த இயக்குநர் சங்கர், லிங்குசாமிக்காக அங்கிருந்து வந்துள்ளார். மேடையில் பேசும்போது, கொரோனா காலத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தப்போ, நான் மனம் விட்டு பேசக்கூடியவராக இருந்தவர் லிங்குசாமி எனக் கூறினார். லிங்குசாமி நல்ல ரசிகன், கவிதைக்காரன் என்றும் பாராட்டினார்.


மேலும் படிக்க | சீரியலுக்கு முழுக்கு; சுந்தரி, கண்ணம்மாவுக்கு கிடைத்த மாஸ் அங்கீகாரம்


கடைசியாக பேசிய லிங்குசாமி, பேசத் தொடங்கியதும் கண்கலங்கினார். பின்னர் பேசத் தொடங்கியதும் ‘நானும் மனிதர்களை சம்பாதித்த கோடீஸ்வரன் எனக் கூறினார். நண்பர்களை இழக்காமல் வாழ்ந்தாலே மிகப்பெரிய சந்தோஷம். நான் வாய்ப்பு கேட்டவர்கள் எல்லாம் இங்கு வந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. ஊரில் இருந்து வரும்போது எதுவும் எடுத்துக்கொண்டு வரவில்லை. நண்பர்களை சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கிறேன் என உணர்ச்சி வசமாக பேச்சை முடித்தார். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR