சீரியலுக்கு முழுக்கு; சுந்தரி, கண்ணம்மாவுக்கு கிடைத்த மாஸ் அங்கீகாரம்

சுந்தரி சீரியல் கேப்ரில்லா மற்றும் கண்ணம்மா சீரியல் வினுஷா தேவிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இடபகு தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 7, 2022, 12:55 PM IST
  • சுந்தரி சீரியல் கேப்ரில்லா
  • கண்ணம்மா சீரியல் வினுஷா தேவி
சீரியலுக்கு முழுக்கு; சுந்தரி, கண்ணம்மாவுக்கு கிடைத்த மாஸ் அங்கீகாரம் title=

சின்னத்திரையில மிகவும் குறுகிய காலத்தில் சீரியல் மூலம் ஜொலித்த பிரபங்கள் சுந்தரி சீரியல் கேப்ரில்லா மற்றும் கண்ணம்மா சீரியல் வினுஷா தேவி ஆவார்கள். டிக் டாக் இருந்த காலத்தில் இவர்கள் இருவருமே மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள். 

இதில் கேப்ரில்லா தனது தொலைக்காட்சி வாழ்க்கையை விஜய் டிவி மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி இருந்த கலக்கப்போவது யாரில் போட்டியாளராக பங்கேற்று பலருக்கும் பரிட்சயமானார். அதற்கு பிறகு இவர் எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். மேலும் இவர் பல ஷார்ட் பிலிம்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். அந்தவகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து ஐரா திரைப்படத்தில் சிறுவயது நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து கேப்ரில்லா பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் சுந்தரியாக நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | மீண்டும் முதலிருந்து தொடங்கப்படுகிறதா இந்தியன் 2? படப்பிடிப்பு எப்போது?

அந்தவகையில் இந்த சீரியல் இவருக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த சீரியல் மூலம் கேப்ரில்லா தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும், இந்த சீரியல் தொடங்கிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் நடிகை கேப்ரில்லா. இருப்பினும் இந்த வெற்றிக்கு பிறகும் கேப்ரில்லா பல பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர் தனது நிறத்தால் பல வாய்ப்புகளை இழந்ததாக வருத்தமாக கூறியிருந்தார்.

அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் பாரதி கண்ணம்மா சீரியல் புது கண்ணம்மாவாக தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார். இவரும் டிக் டாக் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானவர். பின் பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஹினிகக்கு பதில் வினுஷா கண்ணம்மாவாக நடித்து வருகிறார். டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் தொடர்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் தொடங்கிய காலத்திலிருந்து தற்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கின்றது. இப்படி இவர்கள் இருவருமே கடின முயர்ச்சி மற்றும் பல விமர்சனங்களை தாண்டி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளனர். 

இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் வெள்ளித்திரையில் களமிறங்கபோகின்றனர். இந்த செய்தி வெளியான முதல் வெகுவாக வைரலாகி வருகின்றது. அதன்படி இவர்கள் இருவரும் இணைந்து கதாநாயகியாக N4 என்கிற படத்தில் நடித்து வருகின்றனர்.

 

 

இந்த படத்தில் இவர்கள் இருவரும் மீனவ பெண்ணாக நடித்து இருக்கின்றார்கள். இவர்களுடன் இந்த படத்தில் மைக்கேல், தர்மதுரை, அனுபமா குமார், அபிஷேக் சங்கர், வடிவுக்கரசி, அழகு என பலர் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | விஜய்யுடன் தீராத மனக்கசப்பு... ஆத்திரத்தின் உச்சியில் எஸ்.ஏ.சி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News