பிரம்மாண்டமாக உருவாகியுள்ள விக்ரம் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தை பற்றிய நிறைய தகவல்கள் அன்றாடம் வெளிவந்து கொண்டே இருக்கின்றது.  ஜூன்-3ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகப்போகும் இந்த படத்தை திரையரங்குகளில் கண்டு மகிழ ரசிகர்கள் நாட்களை எண்ணிக்கொண்டு ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் இருவரும் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ‘குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க..’ - அஜித் சொல்லும் ‘கழுதைக் கதை’ யாருக்கு?


தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் படம் உருவானதால் அவரது சம்பளமாக 50 கோடி கணக்கிட பட்டுள்ளது.  அவருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு 10 கோடி ரூபாயும், பஹத் பாசிலுக்கு 4 கோடி ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் படத்தில் நடித்திருந்த மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தலா 4 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இப்படத்தின் இசையமைப்பாளர் அனிரூத்துக்கு 4 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.  இந்த படம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்யும் என்றும், கமல்ஹாசன் கேரியரில் இது பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கும் என்றும் திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.



மேலும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சம்பளமாக 8 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது, இதன் மூலம் தனது நான்காவது படத்திலேயே இவ்வளவு அதிகமான சம்பளத்தை வாங்கியிருக்கிறார் என்றும் ஆச்சர்யமாக பேசப்பட்டு வருகிறது.  கார்த்தியை வைத்து இயக்கிய 'கைதி' படத்தில் இவர் வாங்கிய சம்பளம் ரூ.30 லட்சம், அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் படத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக வாங்கிய நிலையில், இந்த படத்தில் அதிகமான சம்பளத்தை பெற்றிருக்கிறார்.  இதனைத்தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் இதைவிட அதிகமான சம்பளம் கேட்பார் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | வறுத்தெடுத்த நெட்டிசன்கள்... உருக்கமாய் பதிவிட்ட குக் வித் கோமாளி நடுவர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR