'விக்ரம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் தமிழ் திரையுலகின் திறமைவாய்ந்த இயக்குனராக லோகேஷ் கனகராஜ் போற்றப்பட்டு வருகிறார்.  தற்போது இவர் பிரபலமாகவும், வெற்றி இயக்குனராகவும் பாராட்டப்படுவதன் காரணம் இதுவரை இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் ஒன்று கூட தோல்வி அடையாததுதான்.  மேலும் தமிழ் ரசிகர்களின் கவனம் முழுமையும் லோகேஷ் மீது திரும்பிவிட்டது, இவரை பாராட்டி பலரும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.  கடந்த ஜூன்-3ம் தேதி விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற பின்னர் சமூக வலைத்தளங்களில் பலரும் இயக்குனர்  நெல்சனை கலாய்த்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 100 கோடி 200 கோடிலாம் வேணாம்; ஸ்ட்ரைட்டா 400 கோடிதான்! வெறித்தன வசூலில் விக்ரம்!


அதாவது எப்படி படம் எடுக்கவேண்டுமென்று லோகேஷை பார்த்து நெல்சன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.  இந்த வருடத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்'  திரைப்படம் வணிக ரீதியில் வெற்றிபெற்ற போதிலும், இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  இந்த படம் வசூலை அடிப்படையாக வைத்து வெற்றிப்படம் என்று கருதப்பட்டாலும், படம் அதிருப்தியை அளித்திருப்பதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்தனர்.  இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன்,  ரஜினிகாந்தை வைத்து 'தலைவர் 169' படத்தை இயக்கவிருக்கிறார்.  இந்நிலையில் பலரும் நெல்சனை, இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.



இதுகுறித்து சமீபத்திய பேட்டியொன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் வருத்தம் தெரிவித்துள்ளார், அவர் கூறுகையில், இரண்டு இயக்குனர்களையும் ஒப்பிட்டு கூறி நகைச்சுவையாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்வது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது, இது நெல்சனுக்கும் சங்கடத்தை அளிக்கிறது.    நானும் நெல்சனும் நல்ல நண்பர்கள், படம் வெற்றி அல்லது தோல்வி அடைவது யாருக்கு வேண்டுமானாலும்  வரலாம் என்று கூறியுள்ளார்.  மேலும் பேசியவர் இனிமேல் யாரும் சமூக வலைத்தளங்களில் நெல்சனை ட்ரோல் செய்யவேண்டாமென்றும், எவரது வேலைகளையும் பற்றி குறைகூற வேண்டாமென்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


லோகேஷ் இவ்வாறு பேசியதை பலரும் புகழ்ந்து வருகின்றனர், இவரது கருத்துக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் இருவரும் ஒரே நேரத்தில் தான் திரைத்துறைக்குள் வந்தார்கள் அதோடு இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பத்தே நாளில் பாக்ஸ் ஆபிஸில் இப்படி ஒரு சாதனை படைத்த 'விக்ரம்'!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR