லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படம் நிச்சயமாக பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்ததை போலவே இப்படம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாது தற்போது இப்படம் படைத்துள்ள சாதனையானது இனிவரும் காலங்களில் உள்ள படங்களுக்கு மிகுந்த சவாலாக அமையும் என்று கருதப்படுகிறது. அந்த அளவிற்கு இப்படம் தற்போது அதிக வெற்றியை பெற்று, வெளியான வெறும் பத்து நாட்களில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 250 கோடிகளுக்கு மேல் வசூலித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் உறைய செய்துள்ளது.
மேலும் படிக்க | விஜய்காக கதை ரெடியாக வைத்திருக்கும் தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குநர்
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இப்படம் ரூ.14 முதல் 15 கோடி வரை வசூல் செய்திருந்தது, தமிழகத்தில் இரண்டாவது ஞாயிறு அன்று இவ்வளவு வசூல் செய்தது இதுவே ஆல் டைம் ரெக்கார்டு என்று கூறப்படுகிறது. இப்படம் வெளியான 9வது நாளில் ரூ.10.50 கோடிகள் வசூலித்துள்ளது, இது இரண்டாவது சனிக்கிழமையன்று ஒரு படத்திற்கான மற்றொரு ஆல் டைம் சாதனையாகும். அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' மற்றும் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' போன்ற படங்களின் வசூலை, 'விக்ரம்' படத்தின் வசூல் முறியடித்துள்ளது. வலிமை மற்றும் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களும் தமிழகத்தில் ரூ.100 கோடி மற்றும் ரூ.120 கோடி ரூபாய் என வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காளிதாஸ் ஜெயராம், நரேன் மற்றும் செம்பன் வினோத் ஜோஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இதில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் எடிட்டிங் பணியை செய்துள்ளார். பாகுபலி, பிகில் போன்ற படங்களின் வசூலை தாண்டி சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | 'ஏகே61' படத்தின் கதை இதுதானா? வெளியான தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR