’தளபதி 67’ லோகேஷ் கனகராஜின் யுனிவர்சில் உருவாகிறதா?
தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜின் யுனிவர்சில் உருவாகிறதா? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழின் முன்னணி இயக்குநராக உருவாகியிருக்கும் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக தளபதி விஜய்யுடன் இணைய உள்ளார். இந்தப் படத்தின் கதை எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அவர் ஏற்கனவே கைதி படத்தின் தொடர்ச்சியாக விக்ரம் படத்தை எடுத்து மெஹா ஹிட்டைக் கொடுத்திருக்கிறார். அடுத்ததாக சூர்யாவுக்கு ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தை உருவாக்கி, லோகேஷ் கனகராஜின் யுனவர்ஸை உருவாக்கி வைத்துள்ளார்.
மேலும் படிக்க | தாய், தந்தையை தனியாக தவிக்கவிட்ட விஜய்?
இதனால், அடுத்தப் படம் இந்த வரிசையில் இடம் பெறுமா? அல்லது ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து உருவான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு நேர்காணல்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பலாக பதிலளித்த லோகேஷ் கனகராஜ், ஆங்கிலப் பேட்டி ஒன்றிலும் அதையே செய்துள்ளார். அந்தப் பேட்டியில் இளையதளபதி விஜய்க்கு கதை தெரிவித்திருப்பதை உறுதி செய்த அவர், அந்தப் படம் மாஸ்டர் யுனிவர்சில் சேருமா? அல்லது லோகேஷ் கனகராஜின் விக்ரம் வரிசையில் இணையுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
தயாரிப்பு நிறுவனம் எதையும் அறிவிக்காதவரை தன்னால் எதுவும் கூற முடியாது எனத் தெரிவித்துவிட்டார். ஆனால், தளபதி 67 திரைப்படம் வித்தியாசமாகவும், புதிய கதைக்களத்துடன் பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை மட்டும் உறுதி செய்துள்ளார். விக்ரம் திரைப்படம் கைதி திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளி வந்தது. கமல்ஹாசன் தயாரித்து நடித்த இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, பகத்பாசில் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடிப்பில் மிரட்டியிருந்தனர். இந்திய அளவில் கவனம் பெற்ற விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸிலும் ஹிட் அடித்தது. அதாவது, 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | இந்த நடிகையுடன் முதல் முறையாக ஜோடி சேரும் சூர்யா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR