இந்த நடிகையுடன் முதல் முறையாக ஜோடி சேரும் சூர்யா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக 'பீஸ்ட்' பட புகழ் பூஜா ஹெக்டேவை நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 4, 2022, 12:34 PM IST
  • சூர்யா தற்போது பாலா படத்தில் நடித்து வருகிறார்.
  • இதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
  • இந்த ஆண்டு இறுதியில் இப்படம் தொடங்க உள்ளது.
இந்த நடிகையுடன் முதல் முறையாக ஜோடி சேரும் சூர்யா? title=

'சூரரை போற்று', 'ஜெய் பீம்' மற்றும் 'எதற்கும் துணிந்தவன்' என அடுக்கடுக்காக மூன்று படங்களின் மூலம் சிறப்பான வெற்றியை கண்டார் நடிகர் சூர்யா.  இந்த மூன்று படங்களின் வெற்றியையும் மிஞ்சியதாக அமைந்தது 'விக்ரம்' படம், இந்த படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.  அடுத்ததாக மாதவன் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்' படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடித்துள்ளார், அதனை தொடர்ந்து 'சூரரை போற்று' ஹிந்தி ரீமேக்கிலும் சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் படிக்க | சூர்யாவின் இந்த இரண்டு படங்கள் நான் பண்ண வேண்டியது - மாதவன்!

அடுத்ததாக பாலா இயக்கத்தில் சூர்யா 41 படத்தின் தனக்கான போர்ஷனை சூர்யா விரைவில் நடித்து முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார்.  அதனையடுத்து நீண்ட நாட்களாக கூறப்பட்டு வரும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.  சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் இந்த படம் மிக அதிகமாக பொருட்செல்வத்தில் உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது.  இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பதாக இருந்த நிலையில் தற்போது தயாரிப்பு பணியை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் செய்யவிருக்கிறது.  பிரபாஸ் நடிப்பில் வெளியான 'சாஹோ' மற்றும் 'ராதே ஷ்யாம்' போன்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளை இயக்குனர் தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 'பீஸ்ட்' பட புகழ் பூஜா ஹெக்டேவை நடிக்கவைக்க இயக்குனர் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் இந்த படத்தில் பூஜாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் தெரிவிக்க்கின்றன.

மேலும் படிக்க | விஜய்யை கலாய்த்துவிட்டு தற்போது நன்றி கூறும் கோமாளி இயக்குனர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News