பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம் தான் 'மாமன்னன்'. ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில், வடிவேலு போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர் ஒன்றில் வடிவேலு அரசியல்வாதி போல வெள்ளை வேஷ்டி சட்டை போட்டுகொண்டு நிற்க, அவருக்கு எதிர்முனையில் உதயநிதி ஸ்டாலின் கோட் சூட் மாட்டிக்கொண்டு கெத்தாக நிற்பது போன்று இருந்த புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து கையில் துப்பாக்கியுடன் ஆக்கிரோஷமாக வடிவேலு அமர்ந்து இருக்க, அவருக்கு அருகில் கையில் கத்தியுடன் உதயநிதி ஆக்கிரஷோமாக அமர்ந்து இருக்கும் போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'மாமன்னன்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் நடைபெறவிருக்கிறது. மேலும் 'மாமன்னன்' படத்தை ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. அத்துடன் இந்த படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவை நாளை சென்னையில் நடக்கயுள்ளது. 'மாமன்னன்' படத்தின் பிரம்மாண்டமான இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் ஏ ஆர் ரஹ்மான் நேரலையில் இசையமைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | Tamanna: தமன்னாவிற்கு விரைவில் திருமணம்? பாலிவுட் பிரபலம் சொன்ன பதில் இதுதான்! 


இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்றாவது பாடல் வெளியீட்டு குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் இருவருக்குமிடையேயான ரொமான்ஸ் பாடலாக உருவாகியிருக்கும் பாடலின் அறிவிப்பை சிறப்பு போஸ்டருடன் இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். 



அதனுடன் இயக்குனர் மாரி செல்வராஜ் “நெஞ்சமே நெஞ்சமே.. கொஞ்சியே சொல்லுதே... ஆரிரோ.” என்று பாடல் வரிகளை குறிப்பிட்டு அதனுடன் “மாமன்னன் இசை மழை நாளை முதல்” என்று முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


உதயநிதி முழுநேர அரசியல்வாதியாக செயல்பட்டு வந்தாலும், தான் முன்னர் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பல வெற்றி படங்களை தயாரித்து இருக்கிறார், அதன்பின்னர் கதாநாயகனாக தனது பயணத்தை தொடங்கி குறுகிய காலத்தில் பிரபலமான தயாரிப்பாளராகவும், நடிகராகவும் உயர்ந்து இருக்கிறார். கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' எனும் நகைச்சுவை கலந்த காதல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. இதையடுத்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், நிமிர், சைக்கோ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பாகுபலி நடிகருக்கு வில்லனாக கமல்? 20 நாட்கள் கால்ஷீட்டிற்கு இத்தனை கோடி சம்பளமா..!


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ