Tamanna: தமன்னாவிற்கு விரைவில் திருமணம்? பாலிவுட் பிரபலம் சொன்ன பதில் இதுதான்!

Tamanna: ஜெயிலர் படத்தில் பிசியாக நடித்துவரும் நாயகி தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து நடிகையின் காதலர் எனக்கூறப்படும் விஜய் வர்மாவே ஒரு பதிலை கொடுத்துள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : May 31, 2023, 09:45 AM IST
  • தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை தமன்னா.
  • பாலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக தகவல்.
  • திருமணம் குறித்த கேள்விக்கு விஜய் வர்மா பதில்.
Tamanna: தமன்னாவிற்கு விரைவில் திருமணம்? பாலிவுட் பிரபலம் சொன்ன பதில் இதுதான்! title=

தமிழ் மற்றும் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் பிசி நடிகை, தமன்னா. சமீப காலமாக பாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்தியில் வெளியான சாந்த் சே ரோஷன் சேஹ்ரா எனும் படத்தின் மூலம் திரையுலகிறகு அறிமுகமான இவர், அடுத்து தெலுங்கு சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்திலும் தமிழில் கேடி எனும் படத்திலும் முதன்முதலாக நடித்தார். அப்படியே இவரை சினிமா வளர்த்து விட, இன்று மூன்று திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர், இந்தி நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. 

விஜய்-தமன்னா காதல்? 

தமன்னாவிற்கு கடந்த் சில வருடங்களாக பாலிவுட் பட வாய்ப்புகள் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன. மும்மொழி பட ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த முகமாக இருந்த தமன்னா, நெடுநாட்களாக சிங்கிள் என்ற ஸ்டேடஸை அப்டேட் செய்யாமல் இருந்தார். தவிர, தனது தனிப்பட்ட வாழ்க்கையை கேமரா முன் காண்பிக்காத பிரபலங்களில் ஒருவர் தமன்னா. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக கூறப்பட்டது. பிறகு, அந்த தகவல் காற்றோடு காற்றாக கரைந்து போனது. தற்போது, இந்தி நடிகரான விஜய் வர்மாவும் இவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இருவருமே வாய் திறக்காமல் உள்ளனர். 

விரைவில் திருமணம்? 

அபுதாபியில் சில தினங்களுக்கு முன்னர் IFFA 2023 விருதுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில், இந்திய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பாலிவுட்டை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் இதற்கு படையெடுத்தனர். நடிகர் கமல் ஹாசனிற்கு இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் தமன்னாவின் காதலர் எனக்கூறப்படும் விஜய் வர்மாவும் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிருபர்கள் சிலர் சினிமா குறித்தும் விருது விழா குறித்தும் கேள்வி கேட்டனர். 

விஜய் வர்மா ‘நச்’ பதில்..!

செய்தியாளர்களுக்கு பதிலளித்து கொண்டிருந்த விஜய் வர்மாவிடம் ஒரு நிருபர், “விரைவில் நல்ல செய்தி எதுவும் உண்டா..?” என்று கூறினார். அதற்கு அவர், “கூடிய விரைவில் அதைப்பற்றி கூறுகிறேன்” என்று பதில் சொல்லிவிட்டு அசால்டாக எஸ்கேப் ஆகிவிட்டார். நடிகரின் இந்த பதில்தான் தற்பாேது பல பாலிவுட் செய்தி சேனல்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | Navya Nair: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகை..ஐயய்யோ இந்த பிரச்சனையா?

வீடியோவில் சிக்கிய தமன்னா!

சில மாதங்களுக்கு முன்னர் தமன்னாவும் விஜய் வர்மாவும்தான் பல பாலிவுட்டின் கிசுகிசு பக்கங்களில், தலைப்பு செய்தியாக மாறினர். விஜய்யும் தமன்னாவும் ஒரு நாள் இரவு டின்னருக்காக வெளியில் சென்றுள்ளனர். அப்போது அவர்களை சிலர் வீடியோ எடுத்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளளனர். அதில், தமன்னா மற்றும் விஜய் காரில் ஏறி செல்கின்ற காட்சி இடம் பெற்றுள்ளது. 

வதந்திகளை மறுத்த தமன்னா:

கோவாவிற்கு சென்ற தமன்னாவும் விஜய் வர்மாவும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முத்தம் கொடுத்துக் கொண்டது போன்ற வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் அந்த வீடியோ பதிவில் முத்தம் கொடுத்து கொண்டவர்கள் இவர்கள்தானா என்று தெரியவில்லை. ஏனென்றால் அவர்களது முகங்கள் அதில் சரியாக தெரியவில்லை. இதையடுத்து, ஒரு நேர்காணலில் தமன்னாவிடம் விஜய் மீதான காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் படத்தில் இணைந்து நடித்துள்ளோம். இவ்வாறு வெளிவரும் வதந்தி செய்திகளை மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை” என கூறிவிட்டார் தமன்னா. 

ஜெயிலர் படத்தில் தமன்னா..

நடிகை தமன்னா, ஜெயிலர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கிவரும் இந்த படத்தில் மூன்று திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் காமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலுக்காக தமன்னா நடனமாடுவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். படம், ஆகஸ்டு 10  அன்று வெளியாகவுள்ளது. 

மேலும் படிக்க | பாகுபலி நடிகருக்கு வில்லனாக கமல்? 20 நாட்கள் கால்ஷீட்டிற்கு இத்தனை கோடி சம்பளமா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News