தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி ஹீரோ என்ற பெயரை சிவகார்த்திகேயன் பெற்றிருக்கிறார். இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்த டாக்டர் படம் 100 கோடி ரூபாயை வசூலித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதற்கு அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான இப்படமும் 100 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு படங்கள் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



தற்போது சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்துவருகின்றார். படத்தை கே.வி. அனூதீப் இயக்கிவருகிறார். விரைவில் இதற்கான பணிகள் முடிவடைவதால் விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியாக இருக்கிறது.


மேலும் படிக்க | ‘விக்ரம்’ படம் பார்த்த நடிகர் அஜித் குடும்பம்!- வைரல் புகைப்படங்கள்!


தனது 20ஆவது படத்தை முடித்த பிறகு கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவா ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சாய் பல்லவி முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.



இப்படி வரிசையாக படங்கள் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் தனது 22ஆவது படத்திலும் கமிட்டாகியுள்ளார். அதனை மண்டேலா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.


இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 22ஆவது படத்தில் அவருக்கு வில்லனாக தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | கமல் அண்ணா எனது கனவு நிறைவேறியது - சூர்யா நெகிழ்ச்சி ட்வீட்


ஆனால் இயக்குநர் குறித்த அறிவிப்பே இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவலில் எவ்வளவு உண்மை இருக்கிறது என தெரியவில்லை. ஒருவேளை சிவகார்த்திகேயனுக்கு மிஷ்கின் வில்லனாக நடித்தால் அந்த காம்பினேஷனும் அதகளமாக இருக்கும்  என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe