கமல் அண்ணா எனது கனவு நிறைவேறியது - சூர்யா நெகிழ்ச்சி ட்வீட்

கமலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு நிறைவேறிவிட்டதாக நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 4, 2022, 01:36 PM IST
  • விக்ரம் படத்தில் சூர்யா நடித்திருக்கிறார்
  • ரசிகர்கள் விக்ரம் படத்துக்கு அமோக வரவேற்பு
கமல் அண்ணா எனது கனவு நிறைவேறியது - சூர்யா நெகிழ்ச்சி ட்வீட்  title=

மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கமல் ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் விக்ரம் படத்தை இயக்கினார். கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பெரிய ஹீரோக்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது அதை இளம் இயக்குநர்கள் வீணடித்துவிடுகிறார்கள் என்ற கருத்து நிலவிவந்த சூழலில் விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

Kamal

படத்தை பார்த்த ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் ரசிகன் என்பதை நிரூபித்துவிட்டார். தனக்கு பிடித்த நாயகனை பார்த்து பார்த்து காட்சிப்படுத்தியிருக்கிறார் என ஏகத்துக்கும் புகழ்ந்துவருகின்றனர்.

அதுமட்டுமின்றி சமீபமாக பெரிய ஹீரோக்களின் படம் எதுவும் கோலிவுட்டில் எடுபடாமல் ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா, கேஜிஎஃப் 2 போன்ற வேற்று மொழி படங்கள் வெற்றி பெற்றன. 

மேலும் படிக்க | விக்ரம்’ படம் பார்த்த நடிகர் அஜித் குடும்பம்!- வைரல் புகைப்படங்கள்!

ஆனால் விக்ரம் படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளதால் இனி தமிழ் படங்கள் தொடர்ந்து வெற்றியடையும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக திரைத்துறையினரும் கூறிவருகின்றனர்.

இந்தச் சூழலில் விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரமும் அருமையாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Surya

இந்நிலையில் விக்ரம் படத்தில் நடித்தது தொடர்பாக சூர்யா நெகிழ்ச்சியுடன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க | அடடே சுந்தரா எப்படிப்பட்ட படம் - நானி சொல்வது என்ன?

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள கமல் அண்ணா எப்படி சொல்றது..!? உங்களுடன் திரையில் தோன்றவேண்டும் என்பது எனது கனவாகும். இதை சாத்தியப்படுத்தியதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News