அமலா பால் நடிப்பில் உறுவாகியுள்ள ஆடை திரைப்படம் தன்னுடைய கதை கருவை கொண்டு உருவாகியுள்ளது என இயக்குநர் பார்திபன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக விஷால் நடிப்பில் உருவாகி வெளியான அயோக்யா திரைப்படம் திரைக்கு வந்தபோது இந்த படம் நான் இயக்கிய உள்ளே வெளியே படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இது அயோக்கியத்தனம் என்று ட்விட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார் பார்த்திபன். அந்த படத்தில் அவரும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில், தற்போது அமலாபால் நடிப்பில் வெளியாகியுள்ள ஆடை படத்தின் கதையும் தனது படத்தின் காப்பிதான் என்று ட்விட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.



இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது... "PRANKly speaking-ஆடை படத்தின்  மூலக்கருவான Prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின்கூட்டியே மாற்றி 2004- 'குடைக்குள் மழை'வந்தது வன்மையான கண்டனத்திற்கு + தண்டனைக்குரியது! 15 years பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த Prank-ஐ இன்னும் (eve teasing-ஐ விட கொடுமை) ஒழிக்காமல் இருப்பது" என குறிப்பிட்டுள்ளார்.