ராஜராஜ சோழன் விவகாரம்... வெற்றிமாறன் கருத்துக்கு பேரரசு பதிலடி
ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேசியதற்கு பேரரசு பதிலடி கொடுத்திருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு மணிவிழா எடுக்கப்பட்டது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய வெற்றிமாறன், " தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படிதொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள்" என பேசியிருந்தார்.
வெற்றிமாறனின் இந்தப் பேச்சுக்கு ஒருசேர ஆதரவும், எதிர்ப்பும் எழ ஆரம்பித்திருக்கிறது. ராஜராஜ சோழன் இந்துவாக இல்லாமலா தஞ்சை பெரிய கோயிலை கட்டினார் போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதேசமயம் இந்து மதம் 1000 வருடங்களுக்கு முன்னர்தான் தோன்றியது. அப்படிப் பார்க்கையில் ராஜராஜ சோழன் இந்து கிடையாதுதான் என ஒருதரப்பினர் வாதம் வைத்துவருகின்றனர். ஆனால் அவர் அந்த அர்த்தத்தில் எதுவும் கூறவில்லை அவரது பேச்சு திரிக்கப்பட்டிருப்பதாக வெற்றிமாறன் ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதெசமயம் வெற்றிமாறன் அப்படி பேசியது கண்டனத்திற்குரியது என குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் வெற்றிமாறன் பேச்சுக்கு இயக்குநர் பேரரசு பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பேரரசு, “எந்த மேடையை எடுத்தாலும் இந்து மக்களை இழிவுப்படுத்துவது சிலர் ஒரு வேலையாக வைத்திருக்கிறார்கள். ஒருவர் இந்து மதத்தை இழிவுபடுத்தும்போது, அவருக்கு நாங்கள் பதில் சொன்னால், உடனே எங்களுக்கு மத வெறியர்கள் முத்திரை குத்தப்படுகிறது. ராஜராஜ சோழனை இந்து என்று அடையாளம் கொடுக்கிறாங்கன்னு இயக்குனர் வெற்றிமாறன் சொல்றாரு. சரி ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் வேறு என்ன கிறிஸ்துவரா இல்லை இஸ்லாமியரா? ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆட்சி செய்தபோது இந்தியா மாகாணம், மாகாணங்களாக பிரிந்திருந்தது. அதில் மாற்றம் ஏற்பட்டு ஒன்றாக இணைத்து இன்று இந்தியா என்ற நாடாக்கியுள்ளனர்.
உலகத்திலேயே இந்தியா சிறந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல்தான் சைவம், வைணவம் ஆகிய அனைத்தும் இந்திய மதங்கள். அதை ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்து இந்தியர் என்றார்கள். இங்கு சாமி கும்பிடுபவர்கள் அனைத்து தெய்வங்களையும் ஒன்றாக நினைத்து வழிபடுகிறார்கள். சாமி கும்பிடாதவர்களுக்கு இங்கு என்ன பிரச்னை? உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள், நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை” என்றார்.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வன்: இளம் நந்தினியாக நடித்த விக்ரமின் மகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ