கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பிரதீப் தானே ஹீரோவாக நடித்து ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் லவ் டுடே படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவானா மற்றும் ரவீனா ரவி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படம் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 2K கிட்ஸை குறிவைத்து இந்தப் படம் தயாராகியிருப்பதாகவும் படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் எனவும் படத்தை பார்த்தவர்கள் கூறிவருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் ஹீரோவாக பிரதீப்பின் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறதென்றும், தொடர்ந்து அவர் ஹீரோவாகவே நடிக்கலாம் எனவும் கூறிவருகின்றனர். அதேசமயம் பிரதீப்பின் நடிப்பிலும், உடல்மொழியிலும் தனுஷின் சாயல் தெரிகிறது. இப்படியோ போனால் இரண்டு படங்களை தாண்டி அவரால் ஹீரோவாக நிலைக்க முடியாதென்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். எது எப்படியோ லவ் டுடே படம் பெரும் ஹிட்டடித்திருக்கிறது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் மேற்கொண்டு வரும் நாள்களிலும் வசூலை குவிக்கும் என்கின்றனர் திரை ஆர்வலர்கள்.



இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் லவ் டுடே படத்தை பார்த்துவிட்டு பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் பகிர்ந்து, “இதற்கு மேல் நான் என்ன கேட்பேன். சூரியனின் பக்கத்தில் உள்ளதுபோல் இருந்தது. அழுத்தமான அரவணைப்பும், அந்த கண்களும், அந்த சிரிப்பும் , அந்த ஸ்டைலும், அன்பும் ... என்ன ஒரு மனிதர். சூப்பர் ஸ்டார் ரஜினி லவ் டுடே படத்தை பார்த்து என்னிடம் வாழ்த்து தெரிவித்தார். நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் மறக்க மாட்டேன் சார்” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | கட்டணம் செலுத்துங்கள் இல்லை நில்லுங்கள் - ஏர்போர்ட்டில் ஷாருக்கானை தடுத்த சுங்கத்துறையினர்?


இதற்கிடையே இந்தச் சந்திப்பின்போது பிரதீப் ரங்கநாதன் தான் தயார் செய்து வைத்திருந்த ஒரு கதையின் அவுட் லைனை ரஜினியிடம் சொன்னதாகவும் அதற்கு ரஜினி க்ரீன் சிக்னல் காட்டி லைனை டெவலப் செய்ய சொன்னதாகவும் தகவல் ஒன்று கசிந்துள்ளது,


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ