மோடி விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பிய எஸ்ஏசி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் இளையராஜா ஒப்பிட்டு பேசியது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீப காலத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜா ஒப்பிட்டது தவறு என்று சிலரும், அதில் தவறு எதுவும் இல்லை என்று சிலரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வந்தனர். பெரும்பாலான திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் இளையராஜாவின் கூற்றுக்கு கண்டம் தெரிவித்து வந்தனர்.
மேலும் படிக்க | இளையராஜா அனுப்பப்பட்ட சம்மன்! காரணம் இதுதான்
வணிக வரித்துறையில் இருந்து இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டு நேரில் ஆஜராக கோரியதாகவும், ஆனால் இளையராஜா ஆஜராகாமல் இருந்ததாகவும், இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக தான் அவர் இவ்வாறு மோடியை புகழ்ந்து பேசியுள்ளார் என்றும் சில செய்திகள் பேசப்பட்டு வந்தது. மேலும் இளையராஜா சாதாரணமாக கூறியதை அரசியலாக்கக்கூடாது, அவர் கூறியதில் உள்ள நல்ல பாசிட்டிவ் கருத்துகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் அதைவிட்டுவிட்டு தேவையில்லாமல் கண்டதை பேசாதீர்கள் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஜயின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்ஏ.சந்திரசேகர் இளையராஜா பேசியதில் தவறில்லை என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்கிற தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். எனவே இசையமைப்பாளர் இளையராஜா டாக்டர் அம்பேத்கருடன், பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு கூறியதில் எவ்வித தவறுமில்லை என்று கூறியுள்ளார். இவரது கருத்து தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
மேலும் படிக்க | இளையராஜாவுக்கு எதிராக மகன் யுவன்சங்கர்ராஜா சர்ச்சை பதிவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR