இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பாக வெளியாகியிருக்கிறது ஆர்ஆர்ஆர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் லீட் ரோலில் கலக்கியிருக்கும் இந்தப் படம் வெளியான அனைத்து இடங்களிலும் பாக்ஸ் ஆஃபீஸில் கல்லாக் கட்டி வருகிறது. பாகுபாலி ஒன்று கலெக்ஷனை பாகுபாலி 2 முறியடித்ததுபோல், அந்தப் இருபடங்களையும் வசூலில் முறியடித்துள்ளது ஆர்ஆர்ஆர். பிரம்மாண்டத்தின் அடுத்த லெவலாக படம் எடுக்கப்பட்டிருப்பதால், பார்வையாளர்கள் மெய்சிலிர்த்துபோயுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மியாமியில் ஓலித்த ‘ஊ சொல்றியா மாமா’ - சமந்தா ரியாக்ஷன்


வழக்கம்போல் விமர்சனங்களும் இப்படத்துக்கு முன்வைக்கப்பட்டாலும், வசூலில் கலக்கி வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இந்தியிலும் எதிர்பார்த்த அளவுக்கு கலெக்ஷன் இருப்பதாக இப்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இப்படத்தினை பார்த்த இயக்குநர் சங்கர், ஆர்ஆர்ஆர் இயக்குநர் ராஜமௌலியை வெகுவாக பாராட்டியுள்ளார். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரையும் வெகுவாக பாராட்டியுள்ள இயக்குநர் சங்கர், பிரேமுக்கு பிரேம் விஷூவலில் மலைக்க வைத்திருப்பதாக கூறியுள்ளார்.



ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகளை கூறியுள்ள இயக்குநர் சங்கர், மகா ராஜா மௌலி என புகழந்து தள்ளியுள்ளார். தமிழின் பிரம்மாண்ட இயக்குநராக அறியப்படும் சங்கர், மற்றொரு பிரம்மாண்ட இயக்குநரை மனதார பாராட்டியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



மேலும் படிக்க | வைரலாகும் ராஜமௌலியின் ஜாதி குறித்த பேஸ்புக் பதிவு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR