வைரலாகும் ராஜமௌலியின் ஜாதி குறித்த பேஸ்புக் பதிவு

ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குநர்  ராஜமௌலி 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி குறித்து பதிவிட்ட சர்ச்சைப் பதிவு இப்போது வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 27, 2022, 01:36 PM IST
  • ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி
  • பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை வாரிக்குவிக்கிறது
  • ராஜமௌலியின் ஜாதி குறித்த சர்ச்சைப் பதிவு வைரல்
வைரலாகும் ராஜமௌலியின் ஜாதி குறித்த பேஸ்புக் பதிவு  title=

இந்தியாவின் முன்னணி இயக்குநராக இருப்பவர் ராஜமௌலி. அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் அண்மையில் ரிலீஸாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இதுவரை சுமார் 800 கோடிகளுக்கும் மேல் வசூலாகியிருப்பதாக பாக்ஸ் ஆஃபீஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் லீட் ரோல்களில் நடித்துள்ளனர். 1920 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய அல்லூரி ராமராஜூ மற்றும் பீம் ஆகியோரின் போராட்டத்தை பின்புலமாக கொண்டு எடுக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்களை வியக்க வைக்க தவறவில்லை. 

மேலும் படிக்க | மியாமியில் ஓலித்த ‘ஊ சொல்றியா மாமா’ - சமந்தா ரியாக்ஷன்

கற்பனைக் காட்சிகள் மற்றும் கிராபிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் ஒரு பிரம்மாண்டத்தை கொண்டு வந்திருக்கிறார் ராஜமௌலி. அதேநேரத்தில் சர்ச்சைகளும் எழாமல் இல்லை. ஒரு தரப்பினருக்கு ஆதரவாக எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள விமர்சகர்கள், ராமர் ஆங்கிலேயரை அழித்தது போன்று படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் உண்மையை திரித்துக் கூறுவதுபோல் இருப்பதாக ராஜமௌலியை சாடியுள்ளனர். படம் முழுக்க புராணங்கள் மற்றும் காவி சித்தாந்தத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பலர் குற்றம்சாடியுள்ளனர். மேலும், உயர் சாதியை குறித்த ராஜமௌலியின் பார்வை அப்பட்டமாக வெளிப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். 

இந்நிலையில், அவர் 2012 ஆம் ஆண்டு, அதாவது கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி குறித்து முகநூலில் பதிவிட்ட போஸ்ட் இப்போது வைரலாகியிருக்கிறது. அதில், மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு வர்ணங்கள் குறித்து ராஜமௌலி எழுதியுள்ளார். மனுஸ்மிருதியில் ஜாதியைக் கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ள ராஜமௌலி, பஞ்சம ஜாதி பிறரைச் சார்ந்து வாழ்பவர்கள், தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் வாழ்பவர்கள் சூத்திரன், வைசியன் தனக்கு சம்பாதிப்பவர்கள், க்ஷத்திரியன் தனக்குக் கீழ் உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு உண்பவர்கள், பிராமணர் ஒருவர் முதலில் கற்றுக்கொண்டு பிறகு கற்பிப்பவர் என எழுதியுள்ளார். அவரின் இந்தப் பதிவு இப்போது மீண்டும் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | கே.ஜி.எஃப்- 2 ட்ரெய்லரில் என்ன ஸ்பெஷல்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News