சென்னை: கடந்த சில மாதங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் இந்தியன்-2 படமும் ஒன்றாகும். எனினும், தொடர்ந்து இப்படத்திற்கு பல வித சிக்கல்கள் ஏற்பட்டுக்கொண்டே உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களில் ஈடுபடக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடெக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. 


இதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், இயக்குனர் ஷங்கர் (Director Shankar) தனது காட்டமான பதிலை அளித்துள்ளார். 


இந்தியன்-2 (Indian-2) படப்பிடிப்பில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு தான் மட்டும் காரணமல்ல என்பதை அவர் விளக்கியுள்ளார். கமலின் ஒப்பனை தொடர்பான விஷயங்களில் எற்பட்ட தாமதம், கொரோனா தொற்று, படப்பிடிப்பின் துவக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து என பல காரணங்கள் இதற்கு உள்ளன என ஷங்கர் விளக்கியுள்ளார். மேலும் இந்த தாமதத்துக்கு தான் மட்டும் காரணம் என கூறுவது தவறான கூற்று என்பதையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.


இந்த வழக்கின் விசாரணை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளி வைகப்பட்டுள்ளது.


ALSO READ: இந்தியன் 2 படத்திற்கு சோதனை மேல் சோதனை: இந்தியன் தாத்தா மீண்டும் வருவாரா? மாட்டாரா?


முன்னதாக, இந்திய 2 படத்தின் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர்கள் லைகா புரொடக்ஷன்ஸ் இடையே கமல் (Kamal Haasan) மத்தியஸ்தம் செய்ய வாய்ப்புள்ளது என்று ஒரு பகுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கமல்ஹாசனுக்கு தற்போது தனது அரசியல் பணிகளிலிருந்து சிறிய இடைவெளி கிடைத்துள்ளதால், அவர் தனது இரண்டு படங்களான இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகியவற்றில் முழுமையாக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


ராம் சரனின் புதிய படம் மற்றும் ரன்வீர் சிங் நடிக்கும் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக் ஆகிய படங்களின் பணிகளில் இயக்குனர் ஷங்கர் ஈடுபடக் கூடாது என லைகா புரொடெக்ஷன்ஸ் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இரு தரப்பினரையும் தங்கள் பிரச்சனைகளை இணக்கமாக தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாலும், இரு தரப்பாலும் ஒரு சுமுகமான முடிவுக்கு வர முடியவில்லை. இப்போது, கமல்ஹாசன் இயக்குனரையும் தயாரிப்பாளரையும் சந்திக்க வைத்து மத்தியஸ்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த படத்தில், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், டெல்லி கணேஷ், மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


ALSO READ: அஜித், ஷங்கர் இணைய அதிரடியாய் வரவுள்ளதா ‘முதல்வன்-2’? Latest Update!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR