சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் கமல்ஹாசன் வாழ்த்து!!

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், சட்டசபை உறுப்பினர்களாக பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 11, 2021, 12:31 PM IST
  • சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் கூடியது முதல் சட்டசபை கூட்டம்.
  • மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
  • சட்டசபை உறுப்பினர்களாக பதவியேற்ற அனைவருக்கும் கமல்ஹாசன் வாழ்த்து.
சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் கமல்ஹாசன் வாழ்த்து!! title=

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் கடந்த மாதம் நடந்த நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே ஏழாம் தேதி பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் முதல் சட்டசபை கூட்டம் இன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். இன்று காலை 10 மணியளவில் சட்டமன்றம் கூடியது. முன்னதாக, தி.மு.க.வை சேர்ந்த கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார். 

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் (Kamal Haasan), சட்டசபை உறுப்பினர்களாக பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அவர் தனது பதிவில், "இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும்   கேட்டுக்கொள்கிறேன்"  என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ: தவறு செய்தால் பதவி நீக்கம்: தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

முன்னதாக, கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை (MK Stalin), சட்டப்பேரவை செயலாளர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சட்டசபை கூட்டத்தை தொடங்கி வைத்த தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, “மக்கள் மனதில் இடம் பெற்று தேர்தலில் வெற்றி வாகை சூடிய முதலமைச்சர்” என மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார். 
இதன் பிறகு, மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் அனைவரும் அகர வரிசையில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் (Edappadi K Palaniswami) சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக திமுக எம்.எல்.ஏ. அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபா நாயகராக திரு. அப்பாவுவும், துணை சபா நாயகராக திரு.பிச்சாண்டியும் நாளை பதவி ஏற்றுக்கொள்வார்கள்.

ALSO READ: துரோகிகளை களை எடுப்போம், கோழைகளை பொருட்படுத்தவேண்டாம்: கமல்ஹாசன் காட்டம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News