அஜித் படம் டிராப் ஆனது ஏன்? விக்கி சொன்ன பதில்..கடுப்பான ரசிகர்கள்!
Vignesh Shivan Getting Trolled Talking About Ajith Kumar : இயக்குநர் விக்னேஷ் சிவன், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், அஜித் குறித்து பேசியிருக்கும் ஒரு வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vignesh Shivan Getting Trolled Talking About Ajith Kumar : தமிழ் திரையுலகில், ஒரே படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர், விக்னேஷ் சிவன். இவர், தற்போது லவ் இன்ஷுரன்ஸ் கார்ப்ரேஷன் படத்தை இயக்கியிருக்கிறார். இதையடுத்து, அடிக்கடி நேர்காணல்களில் கலந்து கொள்வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அவர் ஒரு நேர்காணலில் பேசியிருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன்-அஜித் படம் டிராப்:
இயக்குநர் விக்னேஷ் சிவன், முதன்முதலாக இயக்கியிருந்த படம், போடா போடி. இந்த படத்திற்கு பிறகு நயன்தாரா-விஜய் சேதுபதி நடித்த நானும் ரெளடி தான் படத்தை இயக்கியிருந்தார். இப்படம், நல்ல வெற்றியை பெற்றதை தொடர்ந்து, அவருக்கு பிரபல ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், அவை அனைத்தும் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. இதையடுத்து, அவர் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தார். ஆனால், அப்படம் டிராப் ஆகி விட்டது. இது குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கும் விக்னேஷ் சிவன், தன்னையே அறியாமல் ஒரு பொய்யை கூறியிருக்கிறார்.
அவர் கலந்து கொண்ட நேர்காணலில், அஜித் குறித்தும் அவர் தன்னிடம் பேசிய விஷயங்கள் குறித்தும் விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
“அஜித்சாருக்கு நானும் ரௌடி தான் படம் ரொம்ப பிடிக்கும். அவரை முதன் முதலாக பார்த்த போது, ‘நான் படங்களை அதிகமாக பார்ப்பதில்லை. ஆனால் நானும் ரௌடி தான் படத்தை பலமுறை பார்த்தேன்’ என்று கூறினார். இந்த படத்தில் வந்த பார்த்திபனின் நெகடிவ் கதாப்பாத்திரம் பிடித்திருந்ததாக கூறினார். அது போல ஏதாவது கதை கொண்டு வாருங்கள் நாம் ஒரு படம் பண்ணலாம் என்று கூறினார். இது நடந்தது, என்னை அறிந்தால் படத்திற்காக நான் பாடல் எழுதிய சமயத்தில்..” என்று விக்கி பேசியிருக்கிறார்.
மேலும், அவேஷம் படத்தில் பகத் பாசில் கதாப்பாத்திரம் போல அஜித்திற்கு தான் ஒரு கதையை ரெடி செய்து வைத்திருந்ததாகவும் விக்கி கூறியிருக்கிறார். அஜித்திற்காக வித்தியாசமான கதையை தயார் செய்ததாகவும், இதற்கு தயாரிப்பாளர்கள் நோ சொன்னதால், படம் டிராப் ஆனதாகவும் கூறியிருக்கிறார்.
இப்படி மாட்டிக்கிட்டீங்களே விக்கி!
விக்னேஷ் சிவன், தனக்கும் அஜித்திற்குமான முதல் சந்திப்பு நடந்ததும், நானும் ரெளடி தான் படம் குறித்து பேசியதும், என்னை அறிந்தால் படம் வெளியாக இருந்த சமயத்தில் என கூறியிருக்கிறார் விக்கி. ஆனால், என்னை அறிந்தால் படம் வெளியானது, பிப்ரவரி 5, 2005. நானும் ரெளடி தான் படம் வெளியானதோ, அதே ஆண்டு, அக்டோபர் 21. தன் படம் வெளியாவதற்கு முன்பு, எப்படி அஜித்திடம் “படம் நல்லாருக்கு” என்ற பாராட்டை விக்கி பெற்றார் என்பது தெரியவில்லை என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க | அஜித் புகைப்படத்தை தூக்கிய விக்னேஷ் சிவன்.. AK62 இயக்குநர் யாரு?
வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..
ஏற்கனவே, தனுஷ்-நயன்தாரா விவகாரத்தில் ரசிகர்கள் விக்னேஷ் சிவனையும் உள்ளிழுத்து சண்டையிட, இப்போது அவரே வாலன்டியராக வந்து இப்படி ஒரு விஷயத்தை கூறி மாட்டியிருக்கிறார். நானும் ரெளடி தான் என்ற ஒரே ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட்டு, ஏன் இப்போது வரை அதைப்பற்றி மட்டுமே விக்கி பேசிக்கொண்டிருக்கிறார் என்பதும் பலரது கேள்வியாக இருக்கிறது.
இன்னும் சிலர், “அஜித் மீடியாவில் வந்து எதுவும் பேசமாட்டார் என்ற தைரியத்தில் இவர் இஷ்டத்திற்கு பொய் கூறி வருகிறார்” என்று சிலர் கருத்துகளை காரசாரமாக பறிமாறி வருகின்றனர். விக்கி கூற வந்த விஷயத்தை மாற்றி கூறிவிட்டாரா, அல்லது வேண்டுமென்றே இப்படி கூறினாரா என்பது தெரியவில்லை. விக்கிக்கு ஆதரவு கொடுக்கும் இன்னும் சிலர், LIK படம் வரும் போது, இதற்கெல்லாம் பதில் தெரியும் என்று கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | பிரபல நடிகருக்கு இரவில் கால் செய்து திட்டு வாங்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ