#VJChithra: முல்லையாக நடிக்க சரண்யா மறுக்கும் காரணம் தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த VJ சித்ரா (VJ Chithra) திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அந்த கதாபாத்திரத்தை வேறு யாராலும் சிறப்பாக செய்துவிட முடியுமா என்றால் அது சந்தேகம் என்று சொல்லும் அளவுக்கு அருமையாக நடித்திருந்தார் சித்ரா.
புதுடெல்லி: பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த VJ சித்ரா (VJ Chithra) திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அந்த கதாபாத்திரத்தை வேறு யாராலும் சிறப்பாக செய்துவிட முடியுமா என்றால் அது சந்தேகம் என்று சொல்லும் அளவுக்கு அருமையாக நடித்திருந்தார் சித்ரா.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நாடகத்தில் சித்ராவுக்கு பதிலாக பலர் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். சித்ராவின் நெருங்கிய தோழியும், கடைசியாக சித்ரா எடுத்தக் கொண்ட வீடியோவில் அவருடன் இருப்பவருமான சரண்யா துராடி (Sharanya Turadi) முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்கலாம் என்று வதந்திகள் உலா வந்தன. அந்த செய்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறார் சரண்யா.
முல்லை கதாபாத்திரத்தில் தான் நடிப்பதாக வெளிவந்த செய்திகள் உண்மையில்லை என்று சரண்யா தெளிவாக தெரிவித்துள்ளார். முல்லை என்று சொன்னால், அது சித்ரா (VJ Chithra) மட்டும்தான். சித்ரா, முல்லையாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை வாழ்ந்து விட்டு போய்விட்டார், அவருடைய இடத்தில் என்னை பொருத்திப் பார்க்க விரும்பவில்லை என்று வருத்தத்தை பகிர்ந்துக் கொள்கிறார் சித்ராவின் தோழி சரண்யா.
மேலும், “முல்லையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து முல்லையாகவே மாறிவிட்டேன்” என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் சித்ரா என்னிடம் சொல்லியிருக்கிறார். அவரது அந்த இடத்தை என்னால் நிரப்ப முடியாது என்று நெருங்கிய தோழியின் உணர்ச்சிகளை பகிர்ந்துக் கொண்டு, தான் முல்லையாக மாட்டேன் என்று நடிகை சரண்யா தெரிவித்துள்ளார்.
சரண்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைகாட்சித் தொடரில் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்ட நிலையில் வேறு யார் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. ரசிகர்களும் அதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். முல்லை கதாபாத்திரத்தையும் இறக்க செய்து விடலாமா என்ற யோசனையும் இருக்கிறதாம். ஆனால், கதையை அதற்கேற்றாற்போல மாற்றுவது சரியாக இருக்குமா இல்லையா என்ற விவாதங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியிருந்தாலும் சரி, இந்த விவாதங்கள் அனைத்துமே, முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ராவின் இடத்தை நிரப்புவது கடினம் என்பது புரிகிறது. கற்பனை கதாபாத்திரமான முல்லையின் இடத்தையே நிரப்ப முடியவில்லை என்னும்போது, நிதர்சனமான சித்ரா என்ற பெண்ணின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR