நடிகர் விஜய் 62-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கடந்த ஜனவரி 19-ம் தேதி பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கியது. விஜய் அவர்கள் கிளப் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி 62 படத்தின் வில்லன்களில் ஒருவர் ராதாரவி, மற்றோருவர் பழம்பெரும் அரசியல் தலைவர் பழ.கருப்பையா என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் இப்படத்தின் மூன்றாவது வில்லன் யார் என்று தகாவல் தற்போது வரை வெளியாக வில்லை.


அந்த வகையில், கேரளாவில் தமிழ் நாட்டிற்கு இணையாக விஜய் படங்களுக்கும் நல்ல வரவேற்பு உண்டு. விஜய் ரசிகர்கள் பல நற்பணிகளை செய்து வருவது அவ்வப்போது செய்திகளாக பரவும். 


இப்படத்தின் இரண்டுக்கட்ட படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் விரைவில் படக்குழு மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்கு செல்லவுள்ளது.


இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளிவரும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


இதனால், விஜய் 62 படம் இந்த வருட  மிழ் புத்தாண்டை எதிர்நோக்கி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.