நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடித்துவருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய்யின் 66ஆவது படமான இதில், கதாநாயகியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதன் மூலம் விஜய்யுடன் முதன்முறையாக ரஷ்மிகா இணைகிறார். சரத்குமார், குஷ்பூ, பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.


விஜய்யின் சமீபத்திய படங்களில் பெரும்பாலானவை ஆக்‌ஷன் படங்கள்தாம். ஆனால் இந்தப் படம் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதமாக அமையவுள்ளதாம். அந்த வகையில், குடும்ப செண்டிமெண்ட் கதையம்சத்துடன் உருவாகிவரும் இப்படத்தில் விஜய்க்குச் சண்டைக் காட்சிகள்கூட இல்லை எனவும் கூறப்படுகிறது.



எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஃபர்ஸ்ட் லுக் போட்டோ ஷூட்டுக்காக மட்டுமே விஜய் தனியாக கால்ஷீட் கொடுத்ததாகவும், ஃபர்ஸ்ட் லுக் தயாராகி இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் பற்றிய தகவல் கசிந்துள்ளது.


அதாவது இப்படத்துக்கு விஜய்யின் பெயரான 'v' யில் ஆரம்பிப்பதுபோல டைட்டில் வைக்கப் படக்குழு திட்டமிட்டதாம். அதன்படி இப்படத்தின் தமிழ் வெர்சனுக்கு ‘வாரிசு’ எனவும் தெலுங்கு வெர்சனுக்கு வாரிசுடு எனவும் தலைப்பு வைக்க முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.


தந்தை- மகன் செண்டிமெண்டை மையமாகக் கொண்டு இப்படம் உருவாவதால் அதற்குப் பொருந்தும் வகையில் இந்தத் தலைப்பு முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் இப்படம் பான் இந்தியா ரிலீஸாக வெளியாக அதிக வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க | மாஸ் காட்டும் கமல்ஹாசன்..! விஜய்யின் ‘வசூல்’ இடம் பறிபோகிறதா? ஓர் அலசல்!


 


அவ்வாறு வெளியாகும் பட்சத்தில், வாரிசு எனும் தலைப்பு அனைத்து மொழிகளுக்குமான தலைப்பாகப் பொருந்துவதில் சிக்கல் உள்ளது. இதனால் வாரிசு எனும் தலைப்பை படக்குழு இறுதி செய்யுமா அல்லது வேறு ஏதும் பெயரை படத்துக்குச் சூட்டுமா எனும் விபரம் இனிமேல்தான் தெரியவரும்.


மேலும் படிக்க | லோகேஷுக்கு கார்.. சூர்யாவுக்கு வாட்ச்.. அனிருத்துக்கு கமல் கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?