லோகேஷுக்கு கார்.. சூர்யாவுக்கு வாட்ச்.. அனிருத்துக்கு கமல் கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

விக்ரம் படத்துக்காக நடிகர் கமல்ஹாசனிடமிருந்து தான் பெற்ற பரிசு என்ன எனும் விபரத்தை இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 15, 2022, 05:45 PM IST
  • கமல் நடித்துள்ள விக்ரம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல்.
  • இயக்குநர், உதவி இயக்குநர்கள், நடிகர் சூர்யாவுக்கு கமல் பரிசு.
  • தனக்கு வழங்கப்பட்ட பரிசு பற்றி அனிருத் சுவாரஸ்யத் தகவல்.
லோகேஷுக்கு கார்.. சூர்யாவுக்கு வாட்ச்.. அனிருத்துக்கு கமல் கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா? title=

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டுவருகிறது. இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ள விக்ரம் திரைப்படம் உலகளவில் சுமார் 400 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கமலின் கரியரில் அதிக வசூல் செய்த படமாகவும் விக்ரம் அமைந்துள்ளது. தொடர் வசூலால் உற்சாகமடைந்துள்ள நடிகரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றைப் பரிசளித்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக கோவையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கமல்ஹாசன் கலந்துகொள்ள வந்தாராம். 

கமலின் ரசிகரான லோகேஷ் கனகராஜ் அப்போது கமலின் காரைத் தொட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டதாக லோகேஷ் அண்மையில் கூறியிருந்தார். அதை மனதில் வைத்துதான் லோகேஷுக்கு கமல் காரையே பரிசளித்ததாகச் சொல்லப்படுகிறது.

இயக்குநரோடு விட்டுவிடாமல் இப்படத்தின் உதவி இயக்குநர்களுக்கும் பைக் பரிசளித்தார் கமல். அதுவும் இரண்டு பேருக்கோ மூன்று பேருக்கோ அல்ல; பணிபுரிந்த 13 உதவி இயக்குநர்களுக்கும் டி.வி.எஸ்.அப்பாச்சி ரக பைக்குகளை பரிசளித்து திரை உலகை பிரமிக்கவைத்தார் கமல்.

பரிசுப் படலம் இத்தோடும் முடியவில்லை. விக்ரமில் ரோலக்ஸ் எனும் கெஸ்ட் ரோலில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்சையே பரிசாக வழங்கினார் கமல். அதுவும் தான் பல காலமாகப் பயன்படுத்திவந்த ரோலக்ஸ் வாட்ச்சைக் கழற்றி சூர்யாவுக்கு பரிசாக வழங்கியுள்ளார் கமல். படக்குழுவில் உள்ள மற்றவர்களுக்கு கமல் என்ன பரிசு கொடுத்து ஆச்சர்யமளிக்கப்போகிறாரோ எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி விழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கேரளாவில் நடந்தது. அதில் இப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தும்   கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர் ஒருவர், லோகேஷுக்கும் சூர்யாவுக்கும் பரிசு கொடுத்ததை சுட்டிக்காட்டி அனிருத்திடம் கேள்வி கேட்க முற்பட்டார். அதற்குள்ளாக முந்திக்கொண்ட அனிருத், கமல்ஹாசன் தனக்கு விக்ரம் படத்தை பரிசாகக் கொடுத்ததாக பதிலளித்தார்.

மேலும் படிக்க | கோட் சூட்.. கூலிங் கிளாஸ்..புது லுக்கில் மாஸாக அஜித்!- வைரல் வீடியோ உள்ளே!

 

டாப் நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இசையமைத்துவிட்ட அனிருத் கமல்ஹாசன் படத்தில் மட்டும் இசையமைக்காமல் இருந்துவந்தார். அதன் பிறகு இந்தியன் - 2 படம்தான் இருவரது காம்போவில் முதன்முதலாக ஒப்புக்கொள்ளப்பட்ட படம். ஆனால் அதற்குள்ளாக விக்ரம் வந்துவிட்டதால் இந்தப் படமே கமலுக்கு அனிருத் இசையமைத்து வெளிவந்த முதல் படமாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மாஸ் காட்டும் கமல்ஹாசன்..! விஜய்யின் ‘வசூல்’ இடம் பறிபோகிறதா? ஓர் அலசல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News