Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்தாண்டு செப். 30ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் இரண்டாவது பாகத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. குறிப்பாக, முதல் பாகம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை வசூல் செய்து தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் தொகையை வசூலித்த படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது. 'பொன்னியின் செல்வன் 2' படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. முதல் பாகம் கொடுத்த பிரமிப்பையும், சுவாரஸ்யத்தை பல மடங்கு அதிகரித்துவிட்டதாக இரண்டாம் பாகத்திற்கும் பலதத் வரவேற்பு கிடைத்தது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தெய்வம் தந்த பூவே அப்டேட்: வினய், மித்ரா இடையே மீண்டும் மோதல், நடக்க போவது என்ன?



மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 2' படம் முதல் பாகத்தைப் போலவே வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நான்கு நாட்களில் இப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலித்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு பெரிய வெளியீடுகள் எதுவும் இல்லாததால் இது இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்த முக்கிய கதாபாத்திரமான நந்தினியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்த டீன் ஏஜ் நடிகை சாரா அர்ஜுன் நடிப்பு அதிக கவனம் பெற்றது.  மறுபுறம் குந்தவையாக த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார் மற்றும் மற்றொரு இளம் நடிகை நிலா அவரது இளமை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இவர் யார் என்றால் தமிழ் சீரியல் நடிகர்களான கவிதா பாரதி மற்றும் கன்யா பாரதியின் ஒரே மகள் நிலா என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஆல் டைம் ஃபேவரிட் 'சித்தி' தொடரை இயக்கிய புகழ் பெற்றவர் தான் கவிதா பாரதி, மேலும் ஜோதிகாவின் 'ராட்சசி' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 'தெய்வம் தந்த வீடு', 'அன்பே வா', 'சித்திரம் பேசுதடி' தொடர்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் கன்யா பாரதி.  கேரளாவில் படித்துக் கொண்டிருக்கும் நிலா, நிறைய பயிற்சிகளுக்கு பிறகு இளம் குந்தவை கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.



பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம் நாவலை போல அல்லாமல், பல கதாபாத்திரங்களின் தன்மை மாற்றப்பட்டதாகவும், சினிமாவுக்காக செய்யப்பட்ட சமரசங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லையெனவும் விமர்சனங்கள் எழுந்தது.  இதனால் படத்தின் சுவாரஸ்யமும் குறைந்துவிட்டதாகவும், மக்கள் விரும்பும் வகையிலான போர் காட்சிகள் இல்லாதது பெரும் சுணக்கத்தை கொடுக்கிறது என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் வருகின்றன. இத்தகைய விமர்சனங்கள், நாவலை படித்தவர்களிடம் இருந்தே எழுகிறது. நாவலை படிக்காதவர்களுக்கு இது சிறந்த அனுபவமாக இருக்கும் எனவும் ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | என்ன மணிகண்டன் ஆரம்பிக்கலாமா..லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட குட்நைட் டிரைலர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ