பொதுவெளியில் டேட்டிங் செய்ய கூடாது! ஸ்பைடர்மேன் தயாரிப்பாளர் எச்சரிக்கை!
`ஸ்பைடர் மேன்` தயாரிப்பாளர், டாம் ஹாலண்ட் (tom holland) மற்றும் ஜெண்டயாவை (zendaya) பீட்டர் பார்க்கர் மற்றும் எம்ஜேவாக நடித்த பிறகு டேட்டிங் செய்வதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளார்.
ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. கிட்டத்தட்ட 4500 கோடி வசூல் மழையில் உள்ளது ஸ்பைடர்மேன். இந்நிலையில் "ஸ்பைடர் மேன்" படத்தின் தயாரிப்பாளர் ஏமி பாஸ்கல் கூறுகையில், டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா ஆகியோர் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் பீட்டர் பார்க்கர் மற்றும் எம்.ஜே. ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். எனவே அவர்கள் நிஜ வாழ்க்கையில் டேட்டிங் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ALSO READ | ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா Spiderman No Way Home? Movie Review
"நான் டாம் மற்றும் ஜெண்டயாவை இந்த கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கும் முன் இருவரையும் தனித்தனியாக அழைத்துச் சென்று அவர்களுக்கு விரிவுரை வழங்கினோம். பொது இடங்களுக்கு ஒன்றாக செல்ல வேண்டாம், சில இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் போன்ற சில கட்டுப்பாடுகளை கூறினோம். நான் ஆண்ட்ரூ மற்றும் எம்மாவுக்கும் இதே அறிவுரையை வழங்கினேன். இது போன்ற சிறிய சிறிய விஷயங்கள் பின்னாளில் பெரும் சிக்கலாக்கும். சாம் ரைமியின் "ஸ்பைடர் மேன்" முதல் தொகுப்பில் டோபே மாகுவேர் மற்றும் கிர்ஸ்டன் டன்ஸ்ட் மற்றும் மார்க் வெப்பின் "ஸ்பைடர் மேன்" பாகத்தில் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் மற்றும் எம்மா ஸ்டோன் ஆகியோருக்கு இடையில் நிஜ வாழ்க்கையிலும் காதல் இருந்தது.
இவர்கள் வெளிப்படையாக பொதுவெளியில் டேட்டிங் செய்யத் தொடங்கினர். பின்பு அவர்கள் இரண்டாவது படத்திற்கு முன்பே பிரிந்தனர். இதனால் முதல் பாகத்தில் வந்த கெமிஸ்ட்ரியை அவர்கள் திரும்பப் கொண்டு வர முடியவில்லை. இதே கதை அமேஜிங் ஸ்பீடெர்மானிலும் தொடர்ந்தது. நாங்கள் யாருடைய தனியுரிமையிலும் தலையிட வில்லை. ஒருவரை நேசிப்பது ஒரு புனிதமான விஷயம் மற்றும் ஒரு சிறப்பு விஷயம். ஆனால், இது போன்ற விஷயங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
ALSO READ | Spiderman No Way Home முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸ் ஹிட்! அதிரடி கலெக்ஷன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR