Lucky Bhaskar Release Date: பல மொழி நடிகரும் இந்திய சினிமாவின் பெரிய நட்சத்திரங்களில் ஒருவருமான துல்கர் சல்மான் 'லக்கி பாஸ்கர்' படத்தில் நடித்துள்ளார். 1980 களின் பிற்பகுதியிலிருந்து 1990 களின் முற்பகுதி வரை ஒரு வங்கி காசாளரின் அசாதாரண வாழ்க்கையை விவரிக்கும் ஒரு திரைப்படமான 'லக்கி பாஸ்கர்'- ஐ பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி மிக பிரமாண்டமாக எழுதி இயக்குகியுள்ளார். இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. மேலும், படத்திற்காக தயாரிப்பாளர்கள் எண்பதுகளின் மும்பையை (அப்போது பம்பாய் என்று அழைக்கப்பட்டது) ஹைதராபாத்தில் சில விலையுயர்ந்த மற்றும் விரிவான செட்களுடன் மீண்டும் உருவாக்கியுள்ளனர். இந்தக் கதை நடக்கும் காலக்கட்டத்தை ஒத்த வங்கிகளை மிகப் பிரம்மாண்டமாக படக்குழு உருவாக்கியுள்ளது.


மேலும் படிக்க | என்னது இந்தியன் படத்துல கமலுக்கு டப்பிங் கொடுத்தது SPB ஆ? வீடியோவை பாருங்கள்


பெரிய அளவில் தரமான உள்ளடக்கத்தை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் 'லக்கி பாஸ்கர்' படத்திற்கும் பிரமாண்டமான செட்களை உருவாக்கத் தயங்கவில்லை. 'லக்கி பாஸ்க'ரின் வாழ்க்கை காலக்கட்டத்திற்கு பார்வையாளர்கள் நிச்சயம் கொண்டு செல்லப்படுவார்கள் எனத் தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 


தயாரிப்பு வடிவமைப்பாளர் வங்காளன் செட்டுகளுக்கு நம்பகத்தன்மையைக் கொண்டு வர விரிவாக ஆராய்ச்சி செய்து தனது மேம்படுத்தப்பட்ட அனுபவத்தினால் சிறந்த கலைப்படைப்பைக் கொடுத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, லக்கி பாஸ்கரின் பயணத்தை வசீகரிக்கும் பாணியில் படம்பிடித்துள்ளார். 


மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான டீசர், பாடல்கள் வைரலாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.



இப்படத்தை முறையே சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் வழங்குகின்றனர். பான்-இந்தியா திரைப்படமான 'லக்கி பாஸ்கர்' தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகிறது. மேலும் விவரங்கள் விரைவில் தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்படும்.


மேலும் படிக்க | திருமணமாகி 15 நாட்களில் கர்ப்பம்!? அதிர்ச்சி கொடுத்த ரஜினி பட நடிகை..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ