Sonakshi Sinha Pregnancy Rumors : பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, தான் கர்ப்பமாக இருப்பதாக பரவும் தகவல்கள் குறித்து வாய் திறந்துள்ளார்.
Sonakshi Sinha Pregnancy Rumors : பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர், சோனாக்ஷி சின்ஹா. இவர், 2014ஆம் ஆண்டு வெளியான ‘லிங்கா’ திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தியில் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கும் ஷதுரங் சின்ஹாவின் மகளான இவர் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் வலம் வருகிறார். இவரது முதல் படமான ‘தபங்’ சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியது. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்ததை தொடர்ந்து, இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியது. இதற்கு அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்குபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர், தமிழில் லிங்கா படத்தில் நடித்திருக்கிறார். இதில், ஃப்ளாஷ் பேக் காட்சியில் வரும் ‘லிங்கேஸ்வரன்’ கதாப்பாத்திராத்திற்கு ஜோடி இவர்தான்.
சோனாக்ஷியின் முதல் பாலிவுட் படமே பெரிய ஹிட் அடித்ததால், இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இவரை தமிழில் அதிகம் அறிமுகப்படுத்திய பாடல் ‘சாரி கா ஃபாலு சா கபி மேட்சு கியாரே’ என்பதுதான்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷதுரங் சின்ஹாவின் மகளான இவர், சல்மான்கான், அக்ஷய் குமார், ரன்வீர் சிங் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.
சோனாக்ஷி கடந்த மூன்று ஆண்டுகளில் மிக குறைவான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த படங்கள், இவருக்கு நல்ல வரவேற்பையும் கொடுத்து மக்கள் மத்தியில் வரவேற்பினையும் பெற்றது.
சோனாக்ஷி, சமீபத்தில் ஜாகீர் இக்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர், சோனாக்ஷியை விட 2 வயது இளையவர். இவரும் பாலிவுட்டில் ஓரளவு பிரபலமானவராக இருக்கிறார்.
சோனாக்ஷி-ஜாஹீரின் திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடைப்பெற்றது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பலரும் பலர் இவர்களின் திருமணம் குறித்து இஷ்டத்திற்கு கருத்துகளை அள்ளி தெளித்து வந்தனர். இவர்களின் திருமணம் கடந்த மாதம் 23ஆம் தேதி நடந்தது.
திருமணம் முடிந்து 15 நாட்கள் ஆன நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் இருந்து வெளியேறிய புகைப்படம் வெளியானது. இதையடுத்து, அவர் ஒரு வேளை கர்ப்பமாக இருக்கிறாரோ என்று நெட்டிசன்கள் புரளியை கிளப்பிவிட்டனர். இதற்கு சோனாக்ஷி பதிலளித்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட இவர், திருமணத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு சென்றாலே பலர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக்கொள்கின்றனர் என்று நக்கலாக கூறியிருக்கிறார். இதிலிருந்து இவர் இப்போதைக்கு கர்ப்பமாக இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது.