மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் தமிழ் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிக்கும் நிறைய படங்கள் தமிழகத்திலும் மிகப் பெரிய அளவு வசூல் செய்துள்ளது. சில நேரடி தமிழ் படங்களிலும் துல்கர் நடித்துள்ளார். 2020ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படம் தமிழகத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கடந்த ஆண்டு வெளியான குரூப் படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடன மாஸ்டர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா  படத்தில் நடித்துள்ளார் துல்கர். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளனர்.   துல்கர் சல்மான் நடிப்பில் 2015-ல் வெளியான 'ஓ காதல் கண்மணி' படத்திலுள்ள பாடலின் ஒரு வரி இப்படத்திற்கு 'ஹே சினாமிகா' என்கிற தலைப்பாக மாறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பவன் கல்யாணின் ருத்ரதாண்டவம்! பீம்லா நாயக் திரைவிமர்சனம்!


துல்கரும் அதிதியும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர், இரண்டு வருடங்களுக்கு பிறகு அதிதிக்கு துல்கரை சில காரணங்களுக்காக பிடிக்காமல் போகிறது. இவரிடமிருந்து விவாகரத்து வாங்க காஜல் அகர்வாலை நாடுகிறார். இறுதியில் இருவரும் பிரிந்தார்களா அல்லது சேர்ந்தார்களா என்பதே ஹேய் சினாமிகா படத்தின் கதை.  அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இல்லாத, பஞ்ச் டயலாக் இல்லாத இந்த கதையை தேர்ந்தெடுத்ததற்கு துல்கருக்கு தனி பாராட்டுக்கள். சில இடங்களில் தன்னையே தாழ்த்தி நடிக்க வேண்டி இருந்தாலும் இயக்குனர் சொல்வதை அப்படியே கேட்டு நடித்துள்ளார்.  அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வாலுக்கு துல்கருக்கு இணையான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் சிறப்பாகவே நடித்துள்ளனர். முக்கியமாக க்ளோஸ்-அப் காட்சிகளில் எமோஷன்களை மூவரும் சிறப்பாக கையாண்டுள்ளனர். 



தனியாக ஒரு காமெடி ட்ராக்கை வைக்காமல் கதை உடனே வரும் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது.  கோவிந்வசந்தாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக உள்ளது. தனது முதல் படத்திலேயே காதலை சிறப்பாக கையாண்டு உள்ளதற்கு பிருந்தாவை பாராட்டலாம். கொஞ்சம் மிஸ் பண்ணாலும் மொத்த கதையும் தப்பாக அமைய வாய்ப்பு உள்ள ஒரு கதையை கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. ஒரு காட்சியில் மட்டுமே வந்தாலும் யோகிபாபு ரசிக்க வைக்கிறார். ஆர்ஜே விஜய் மற்றும் நட்சத்திரா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.



அதிதி ராவ் மற்றும் காஜலின் மேக்கப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம், காஜல் அகர்வாலுக்கு லிப்சிங் பிரச்சனையும் துண்டாக தெரிகிறது.  ஆர்ஜே வாக துல்கர் பேசும் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளது. கண்டிப்பாக ஹே சினாமிகா கணவன் மனைவி இடையே உள்ள காதலை தட்டி எழுப்பும் என்பதில் சந்தேகமில்லை. 


மேலும் படிக்க | அஜித்துக்கு வலிமை சேர்த்திருக்கிறதா வலிமை? விமர்சனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR