கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்த காஜல் அகர்வால்!

தான் கர்ப்பமாக இருப்பதை தனது விளம்பரத்தின் மூலம் காஜல் அகர்வால் உறுதிப்படுத்தி இருக்கிறார்.   

Last Updated : Jan 11, 2022, 07:46 PM IST
  • பலரது கனவு கன்னியாக இன்னும் வலம் வந்து கொண்டிருக்கிறார் காஜல்.
  • கடந்த அக்டோபர் மாதம் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்த காஜல் அகர்வால்!  title=

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் இன்றளவும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை தவறவிடாமல் வைத்திருக்கும் நடிகை காஜல் அகர்வால் (Kajal Agarwal).  பலரது கனவு கன்னியாக இன்னும் வலம் வந்து கொண்டிருக்கிறார் காஜல்.  தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியவர்.  இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காஜலுக்கு எப்போது கல்யாணம் என்று பரவலாக கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.  இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்கு பிறகு இவர்களின் ஒவ்வொரு மூமென்ட்டும் ரசிகர்களிடம் கவனத்தை பெற்றது.  மாலத்தீவில் கடல் நீருக்கடியில் இவர்களின் தேனிலவு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

கடந்த சில நாட்களாகவே காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார் என்று இணையத்தில் செய்திகள் உலா வந்து கொண்டிருந்தது.  பொது இடங்களில் இவர் சென்ற போது வெளியான புகைப்படங்களில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்று தெரிந்தது, இருப்பினும் அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக எதுவும் அறிவிக்கவில்லை.  மேலும் அவரின் கணவர் கவுதம் கிச்சுலு எமோஜி மூலம் கர்ப்பத்தை உறுதிசெய்தார். 
இவ்வாறு மௌனம் காத்து வந்த காஜல் அகர்வால் தற்போது ஒரு விளம்பரம் மூலமாக தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி படுத்தியிருக்கிறார். 

கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ய பயன்படுத்தப்படும் கருவி பற்றிய அந்த விளம்பரத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டவர் அதில், "எனது குழந்தையை இந்த ஆண்டு சந்திக்கபோவதை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், இதைவிட பெரிய சந்தோசம் எனக்கு இருக்காது.  எனது கர்ப்பகாலம் சிறப்பான முறையில் தொடரும் என்று நம்பிக்கை கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.  இந்த பதிவிற்கு அவரது தங்கை நிஷா அகர்வால் இதய எமோஜிகளை பகிர்ந்துள்ளார். மேலும் பலரும் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட காஜல் தற்போது 'பாரிஸ் பாரிஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.  மேலும் கமல் ஹாசனுடன் 'இந்தியன்-2' படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தமான நிலையில் தற்போது கர்ப்பமாக இருப்பதன் காரணமாக இப்படத்திலிருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | 'பேட்ட' படத்தில் நீக்கப்பட்ட காட்சி வெளியானது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News