ஷாருக்கானின் டன்கி படத்திற்கு காலை 6 மணி சிறப்பு காட்சி?
Dunki Movie: ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் “டங்கி” படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.
கிங் கான் என்று அழைக்கப்படும் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் டன்கி. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்திருக்கும் இந்த படம் வரும் டிசம்பர் 21, 2023 அன்று திரையரங்குகளில் வர உள்ளது. தற்போது இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ரன்பீர் கபூரின் நடிப்பில் வெளியான அனிமல் படத்தை தொடர்ந்து, இந்த படமும் காலை 6 மணி காட்சிகளுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைப் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், முக்கிய நகரங்களில் காலை 6 மணி காட்சிகள் இருக்கும் என்று ஷாருக்கான் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். இருப்பினும் தமிழகத்தில் காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி இருக்காது என்று கூறப்படுகிறது. கடைசியாக வெளியான எந்த படங்களுக்கும் காலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை.
மேலும் படிக்க | நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
இந்த படத்தில் ஷாருக்கானுடன் டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் மற்றும் போமன் இரானி உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட், ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் கௌரி கான் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, ப்ரீத்தமின் இசையமைத்துள்ளார். அபிஜத் ஜோஷி மற்றும் கனிகா தில்லானுடன் இணைந்து ராஜ்குமார் ஹிரானி வசனம் எழுதியுள்ளார். மேலும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்திற்கான, விநியோகம் செய்யும் உரிமையை பெற்றுள்ளது.
'ஜவான்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்தினுடைய கேரளா மற்றும் தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளது ஸ்ரீ கோகுலம் மூவிஸ்.ட்ரீம் பிக் பிலிம்ஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் 'டங்கி' படத்தின் விநியோக பங்குதாரராக இணைந்துள்ளது. கிங் கான் ஷாருக்குடன் மீண்டுமொரு படத்தில் நாங்கள் இணைவதில் பெருமிதம் கொள்கிறோம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அவருடன் இன்னும் பல படங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்றும் கூறியுள்ளது. ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தை கேரளா மற்றும் தமிழ்நாட்டில் விநியோகம் செய்துள்ளது ஸ்ரீ கோகுலம் மூவிஸ்.
2023 வது வருடம் ஷாருக்கானின் பிரமாண்டமான கம்பேக் வருடம் ஆக அமைந்துள்ளது. ஜனவரியில் 'பதான்', செப்டம்பரில் 'ஜவான்', தற்போது டிசம்பரில் 'டங்கி'. மும்பை, ஜபல்பூர், காஷ்மீர், புடாபெஸ்ட், லண்டன், ஜெட்டா மற்றும் நியோம் என உலகின் பல இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. CK.முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் ஆகியோர் இப்படத்தின் ஒளிப்பதிவு செய்துள்ளனர். டன்கி படத்துடன் பிரபாஸ் நடித்துள்ள சலார் படமும் வெளியாகிறது. இந்த படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது.
மேலும் படிக்க | விடுதலை பட பட்ஜெட் விவரத்தை பகிர்ந்த வெற்றிமாறன்..! எத்தனை கோடி தெரியுமா..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ