விடுதலை பட பட்ஜெட் விவரத்தை பகிர்ந்த வெற்றிமாறன்..! எத்தனை கோடி தெரியுமா..?

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை 2 படத்தின் பட்ஜெட் குறித்த விஷயத்தை அவரே பேசியிருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Dec 10, 2023, 06:59 PM IST
  • வெற்றிமாறன் விடுதலை படத்தின் பட்ஜெட் குறித்து கூறியுள்ளார்.
  • இப்படத்தை இயக்க இவருக்கு 4.5 கோடிதான் ஒதுக்கப்பட்டதாம்.
  • அதை மீறி இவர் செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா?
விடுதலை பட பட்ஜெட் விவரத்தை பகிர்ந்த வெற்றிமாறன்..! எத்தனை கோடி தெரியுமா..?  title=

இந்த ஆண்டு வெளியாகி மக்களின் மனங்களை ஈர்த்த படங்களுள் ஒன்று, விடுதலை. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருப்பார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேட்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். 

பட்ஜெட்டை தாண்டி செலவு செய்த வெற்றிமாறன்..

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களாக கருதப்படும் கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், வெற்றி மாறன் ஆகியோர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். அதில், இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்கிய அனுபவம் குறித்து பேசியிருந்தார். அப்போது விடுதலை முதல் பாகத்தை உருவாக்க கொடுக்கப்பட்ட பட்ஜெட் 4.5 கோடிதான் என்றும், ஆனால் படத்தை எடுத்து முடித்த பிறகு பார்த்தால் 65 கோடி பட்ஜெட்டை தாண்டியிருந்ததாகவும் கூறியிருந்தார். இந்த நேர்காணலில் அவருடன் இந்தி இயக்குநர் கரண் ஜோஹர் கலந்து கொண்டார். 

மேலும் படிக்க | நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

 அவர், இவ்வளவு பெரிய பட்ஜெட்டை பார்த்து வாய்ப்பிளந்து, “ஷூட்டிங் எடுக்கும் போது   இவ்வளவு செலவாகிவிட்டது என்பதை நீங்கள் அறியவில்லையா?” என்ற் கேட்டார். அதற்கு வெற்றி, தான் என்ன செய்தோம் என்பதே அறிந்திருக்கவில்லை என்று கூறினார். மேலும், என்ன ஷூட்டிங் எடுத்து கொண்டிருக்கிறோம் என்பதே தெரியவில்லை என்றும், இப்போதும் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது தனக்கு தெரியவில்லை என்று கூறினார். இதை கேட்டு பிறர் ஷாக் ஆக, வெற்றிமாறனை பார்த்து கார்த்திக் சுப்புராஜ்ஜும் நெல்சனும் புன்னகைத்து கொண்டிருந்தனர்.

விடுதலை 2..

விடுதலை படம் இரண்டு பாகமாக வெளிவர இருக்கிறது என்பதை வெற்றிமாறன் முன்கூட்டியே அறிவித்து விட்டார். விடுதலை படத்தின் ரிலீஸிற்கு பின்னர் அதன் இரண்டாம் பாகத்திற்கான பட வேலைகள் தொடங்கின. தமிழகத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைப் பெற்று வருகிறது. இதில், விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரத்திற்கான முன் கதைகள் இடம் பெற உள்ளன. அவருக்கு மனைவியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருக்கிறார். படம், அடுத்த வருடம் ஆகஸ்டு மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நடிகராக  களமிறங்கும் வெற்றிமாறன்..

தனது பெயருக்கு ஏற்றார் போலவே, தான் இயக்கிய படங்கள் அனைத்தையும் வெற்றிப்படங்களாக மாற்றியவர், வெற்றிமாறன். இவரது படங்கள் அனைத்துமே ரசிகர்களை கவர தவறியதில்லை. இயக்குநராக மட்டுமன்றி, இவர் தற்போது நடிகராகவும் மாற இருக்கிறார். மிஷ்கின் இயக்கும் புதிய படம், டிரெய்ன். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார்.ஈரா தயானந்த், நாசர், வினய், பவனா, பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கின்றனர். டிரெய்ன் படத்தின் படப்பிடிப்பு, கடந்த டிசம்பர் 1ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பித்தது. இந்த பூஜை விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். 

இந்த படத்தில்தான் வெற்றி, கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரை நடிகராக திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | நடிகராக மாறிய இயக்குநர் வெற்றிமாறன்..! யார் படத்தில் நடிக்கிறார் தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News