எனக்கு இன்னொரு பேர் இருக்கு டிரெய்லர்:
ஜிவி பிரகாஷ் இசை அமைத்து நடித்திருக்கும் படம் "எனக்கு இன்னொரு பேர் இருக்கு" இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘டார்லிங்’ படத்தை இயக்கியுள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் டீசரை யூடூபில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றது. இப்படத்திருக்கு ரஜினி பேசும் பாட்ஷா படத்தின் டயலாக்கான ''எனக்கு இன்னொரு பேர் இருக்கு'' என்ற தலைப்பு வைக்கப்பட்டதாலும், பாட்ஷா படத்தில் ரஜினி கம்பத்தில் கட்டப்பட்டு வில்லனிடம் அடிவாங்கும் காட்சியைப் போன்று மழையில் ஜி.வி.பிரகாஷ் கம்பத்தில் கட்டப்பட்டு இருப்பதுபோல் வெளியிடப் பட்டதால் ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
கயல் ஆனந்தி, சரவணன், கணேஷ் மற்றும் மொட்டை ராஜேந்தரன் என இன்னும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர் தற்போது யூடூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வந்துள்ள இப்படத்தின் டீசரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.