'பசங்க-2' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.  மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்,பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ALSO READ | 'பேச்சிலர்' பட இயக்குனருடன் கூட்டணி சேரும் நடிகர் கார்த்தி?


டி.இமான் இசையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் மூன்று பாடல்களான  'வாடா தம்பி', 'உள்ளம் உருகுதையா', 'சும்மா சுர்ருன்னு' போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்களின் வெற்றியினை தொடர்ந்து சூர்யாவின் படங்கள் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களை உற்சாகமடைய செய்தது, அதிலும் சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியானதால் இது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. 


பாடல்கள் மற்றும் போஸ்டர்களை கண்டு உற்சாகமடைந்த ரசிகர்கள் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று காத்து கொண்டிருந்தனர்.  அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி-3ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது.  ஆனால் சில நாட்களிலேயே ரசிகர்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் படம் முன்னர் குறிப்பிட்ட தேதியில் ரிலீசாகாது என்று அறிவிக்கப்பட்டது.  கொரோனா பெருந்தொற்று காரணமாக திரையரங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளினால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.


 



பின்னர் இப்படத்தை மார்ச் மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.  இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' படம் மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக போகிறது என்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருக்கிறது.  நேற்று DON மற்றும் RRR படங்கள் தங்களது வெளியீட்டு தேதியை அறிவித்தன.


ALSO READ | 'மண்டேலா' இயக்குனருடன் கூட்டணி சேரும் சிவகார்த்திகேயன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR