‘எதிர்நீச்சல்’ ஆதி குணசேகரன்: மாரிமுத்துவை விட அதிக சம்பளம் வாங்கும் வேல ராமமூர்த்தி?
Vela Ramamoorthy Salary For Ethirneechal Serial: தமிழ் சின்னத்திரை உலகில் பிரபலமான தொடராக உள்ள எதிர்நீச்சல் சீரியல் ஆதி குணசேகரன் எனும் கதாப்பாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.
திரைப்படங்களை போலவே, நல்ல கதையுடன் வரும் சின்னத்திரை தொடர்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், அப்படி பலரால் கொண்டாடப்படும் தொடர்களுள் ஒன்று, எதிர்நீச்சல். இந்த தொடரில் மிகவும் பிரபலமான கதாப்பாத்திரம் ஆதி குணசேகரன்.
எதிர்நீச்சல் தொடர்:
தமிழின் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர், பெரியவர்கள் மட்டுமன்றி இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான தொடராகும். சமூகத்தில் பெண்கள் மீது இருக்கும் முரணான கருத்துகளை உடைக்கும் வகையிலும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும் இந்த தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், மதுமிதா, முன்னாள் திரைப்பட நடிகை கனிகா, வி திருசெல்வம் உள்ளிட்டோ முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்கள் தொடரின் முக்கிய கதாப்பாத்திரங்களாக இருந்தாலும் இவர்களின் நடிப்பை எல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு கதாப்பாத்திரம்தான் ஆதி குணசேகரன்.
ஆதி குணசேகரன்:
ஆதி குணசேகரன் கதாப்பாத்திரம், சாதாரண மக்கள் முதல் தமிழ் திரையுலகினர் வரை பேச வைத்தது. அதற்கு காரணமாக இருந்தது, அந்த கேரக்டரில் நடித்த மாரிமுத்துதான். தமிழில் வெளியாகியுள்ள பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும், நெகடிவ் ஷேட் பொருந்திய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வந்த இவர், சில படங்களையும் இயக்கியுள்ளார். மாரிமுத்துவிற்கு கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு எதிர்நீச்சல் தொடரின் டப்பிங் பணியில் இருந்த போதுதான் மாரடைப்பு ஏற்பட்டது.
புதிய ஆதி குணசேகரன்:
ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் மறைவை தொடர்ந்து, அந்த கேரக்டரில் புதிதாக நடித்து கொண்டிருப்பவர், வேல ராமமூர்த்தி. இவரும் பல படங்களில் வில்லனாகவும் நெகடிவ் கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர், இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு இவர் அதிகம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ‘கங்குவா’ பட நடிகருக்கு கிஸ் கொடுத்த ரசிகை..வைரலாகும் வீடியோ..!
மாரிமுத்துவின் சம்பளம்..வேல ராமமூர்த்தியின் சம்பளம்..
வேல ராமமூர்த்தி, 10 நாட்களுக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு முன்னர் இந்த கதாப்பாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவிற்கு ஒரு நாளைக்கு ரூ.15 முதல் 20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
யார் இந்த வேல ராமமூர்த்தி?
வேல ராமமூர்த்தி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். சினிமா மிது இருந்த அதீத ஆர்வம் காரணமாக இவர், திரைத்துறைக்குள் நுழைந்தார். ஆரம்பங்களில் நாவல்களையும் திரைக்கதைகளையும் எழுதிய இவர், பின்னர் மெதுமெதுவாக குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். இவர் முதன் முதலில் நடித்த படம், 2008ஆம் ஆண்டில் வெளியான ஆயுதம் செய்வோம் திரைப்படம்தான். அதை தொடர்ந்து மதயானை கூட்டம், கொம்பன், ரஜினி முருகன், சேதுபதி, பாயும் புலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் நடித்து வரும் ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்திற்கும் மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் இது நடிகர் மாரிமுத்துவிற்கு கிடைத்த அளவிற்கு கிடைத்த ஆதரவு இல்லை என்றும் பேசப்படுகிறது.
மேலும் படிக்க | விஜய் போலவே அரசியலில் ஈடுபாடுள்ள தமிழ் நடிகர்கள்! யார் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ