“ஜோசியர்களை மோசமா பேசினா இப்படி தான் மாரிமுத்து”.. ச்சீ இவ்வளவு கேவலமா பேசாதீங்க..!
எதிர்நீச்சல் தொடர் நடிகர் இன்று உயிரிழந்துள்ளதை தொர்ந்து அவருக்கு பலர் ஆழ்ந்த இரங்கல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், சில ஜோதிடர்களும் ஜோதிடத்தை நம்புபவர்களும் சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
மனிதர்களின் பிறப்பையும் இறப்பையும் யாராலும் தடுக்க முடியாது. இது இயற்கையின் கையில் தான் உள்ளது. ஆனால் நடிகர் மாரிமுத்துவின் மரணத்தை வைத்து சிலர் மோசமாக பதிவிட்டு வருகிவது பலரையும் கோபமடைய செய்துள்ளது.
நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது நடிப்புத்திறமையையும், வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார் என்று சக நடிகர்களும், நண்பர்களும் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் மாரிமுத்து குறித்து சிலர் மோசமாக பதிவிட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜீ தமிழ் சேனலில் ஜோதிடத்தை நம்புகிறவர்கள், நம்பாதவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி வெளியானது.
இதில் ஜோதிடர்களை அவர் வெளுத்து வாங்கி இருந்தார். ஜோதிடம், ஜாதகம் பார்ப்பவர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள் என விளாசி இருந்தார். மேலும் ரஜினிகாந்த் பிறந்த அதே நேரத்தில் 57 ஆயிரம் பேர் பிறந்ததாகவும், ஆனால் சூப்பர் ஸ்டார் ஆனது ரஜினி மட்டும் தான் எனவும் கூறி இருந்தார். கடும் உழைப்பால் தான் ரஜினிக்கு இந்த இடம் கிடைத்ததாகவும், அதற்கும் ஜாதகத்திற்கும் சம்மந்தம் இல்லை எனவும் ஆவேசமாக அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார் மாரிமுத்து. இவரது பேச்சுக்கு அங்கிருந்த ஜோதிடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் படிக்க | மாரிமுத்துவின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? எதிர்நீச்சல் தொடர் நடிகர் விளக்கம்!
இந்நிலையில், இன்று இவரது மறைவை அடுத்து ஜோதிட ஆதரவாளர்கள் சிலர் பதிவிடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதில் ஒருவர், ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் ஒழிக்க நினைத்தவர் ஒழிந்தாராமே என பதிவிட்டுள்ளார்.
பாஸ்கரன் என்ற ட்விட்டர் வாசி, போன வாரம் தான் இந்துமத கடவுள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் எதிராக தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் காரசாரமாக பேசினார், இன்று அகால மரணமடைந்தார் என எழுதியதற்கு மாரிமுத்து ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதில் கவிதா லட்சுமி என்ற ஐடியில் வெளியான ஒரு பதிவில், ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்றால் அமைதி காப்பதே மேல். ஜோதிடர்களை பகைத்துக் கொள்வது எவ்வளவு பெரிய பாவம் என்பதை இவரின் மரணத்தில் அறிகிறேன் என எழுதியுள்ளார். இந்த பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா என்றும், எப்படி ஒருவர் மரணத்தில் கூட இப்படி கேவலமாக சொந்த பகையை தீர்க்க நினைக்கிறீர்கள் எனவும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
இதற்கு நடுவே இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், ”நடிகர் மாரிமுத்து வின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. சமீபத்தில் சோதிடம் பற்றிய விவாதம் ஒன்றில் கலந்து கொண்டார். அவர் எதிரே அமர்ந்திருந்த 50க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் அவரது வருங்காலத்தை கணித்து சொல்கிறேன் என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கூட அவர் ஆயுள் முடிய போகிறது என்பதை சொல்ல முடியவில்லை. உங்கள் மரணத்தை கூட மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரமாக்கி விட்டு சென்று இருக்கிறீர்கள். ஓய்வெடுங்கள் சார்.” என விமர்சனம் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இவருடன் சேர்ந்து பொது மக்கள் பலரும் மேற்கூறியவாறு போஸ்ட் போட்டவர்களுக்கு “ச்சீ இப்படியெல்லாம் பேசாதீங்க..” என்று கமெண்டுகளில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | “மாரிமுத்துவின் இறப்பு அதிர்ச்சியளிக்கிறது..” நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ