மாரிமுத்துவின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? எதிர்நீச்சல் தொடர் நடிகர் விளக்கம்!

திரைப்பட இயக்குனரும் நடிகருமான தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜி. மாரிமுத்து சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.  

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Sep 8, 2023, 02:14 PM IST
  • மாரிமுத்து இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
  • எதிர்நீச்சல் தொடர் மூலம் பிரபலமானவர்.
  • கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
மாரிமுத்துவின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? எதிர்நீச்சல் தொடர் நடிகர் விளக்கம்! title=

மாரடைப்பால் மரணமடைந்த மாரிமுத்துவின் உடல் சென்னையிலிருந்து தேனி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரான பசுமலைத்தேரி கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே சிங்கராஜபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட  பசுமலைத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜி.மாரிமுத்து. 

சினிமா ஆசையால் சிறுவயதிலேயே சென்னை சென்ற அவர், இயக்குனர்கள் ராஜ்கிரண்,  மணிரத்னம், சீமான், வசந்த் உள்ளிட்டோருடன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். 2008ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து,  2014 ஆம் ஆண்டு ‘புலிவால்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். படம் வணிக ரீதியாக வெற்றி பெறாததால் குணச்சித்திர வேடங்களிலும், 100-க்கும் திரைப்படங்களில்  துணை பாத்திரங்களிலும், சின்னத்திரை நாடகங்களிலும் நடித்து வந்தார்.

அதிலும் இவரின் எதிர்நீச்சல் சீரியல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. அந்த சீரியலின் டப்பிங்கின் போது தான் இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் இவர் இறக்கும் முன் அந்த கடைசி 10 நிமிடங்கள் என்ன நடந்தது என நடிகர் கமலேஷ் பகிர்ந்துள்ளார். 

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவுக்கு தம்பியாக நடித்து வரும் கமலேஷ் மாரிமுத்துவின் இறுதி நிமிடங்கள் குறித்து கண்ணீர் மல்க பேசியுள்ளார். இன்று காலை சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது நெஞ்சு வலிப்பதாகவும், வெளியே சென்று காற்று வாங்கிவிட்டு வருவதாகவும் கூறிச் சென்றுள்ளார் மாரிமுத்து. அதற்குள் அவர் மயங்கிவிழ அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது எல்லாமே வெறும் 10 நிமிடத்துக்குள் நடந்துமுடிந்துள்ளது தான் வேதனை. 

மேலும் படிக்க | இன்னிசை தென்றல் தேவாவை களத்தில் இறக்கிய ஜீ தமிழ்! சரிகமப இந்த வார கொண்டாட்டம்

மாரிமுத்துவின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் மிகவும் பிரபலமான தொடர், எதிர்நீச்சல். இந்த தொடரில் நாயகி, நாயகியை விட மிக முக்கிய கதாப்பாத்திரமாக பார்க்கப்பட்டவர் மாரிமுத்து. கொஞ்சம் வில்லத்தனம் கலந்த இவரது கிண்டலான பேச்சும், நகைச்சுவையான முகம் மற்றும் உடல் பாவனைகளும் ரசிகர்களை நன்கு ஈர்த்தன. 

எதிர்நீச்சல் தொடரில் இதுவரை 500 எபிசோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பாகியுள்ளன. இதில், கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட எபிசோடுகளில் மாரிமுத்து நடித்துள்ளார். இவர் ஒரு எபிசோடில் வரவில்லை என்றால் கூட அதில் பெரிதும் சுவாரஸ்யம் இல்லாதது போல உணருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிப்பதுண்டு. இவரது உயிரிழப்பு திரையுலகினர் மட்டுமன்றி ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நெஞ்சு வலி காட்சி..

எதிர்நீச்சல் தொடரில் சில எபிசோடுகளுக்கு முன்னதாக மாரிமுத்துவின் கதாப்பாத்திரமான ஆதி குணசேகரனுக்கு நெஞ்சு வலி வருவது பாேன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. இப்போது அவருக்கு உண்மையாகவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதையடுத்து, நெஞ்சுவலி காட்சியின் போது மாரிமுத்து பேசிய டைலாக்குளை வீடியோவாக ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். இனி அவரை தொடரில் பார்க்கும் போது அவர் செய்யும் காமெடி கூட சோகமாகத்தான் தெரியும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | எதிர்நீச்சல் தொடரில் நடிக்க மாரிமுத்து போட்ட 3 கண்டிஷன்..! என்னென்ன தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News