எதிர்நீச்சல் சீரியலில் நைகர்கள் வாங்கும் சம்பள விவரம்: எதிர்நீச்சல் தொடரில், நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. அதன் விவரத்தை இங்கே காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்நீச்சல் சீரியல்:
தமிழ் தொலைக்காட்சி தொடர்களுள் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குவது, எதிர்நீச்சல் (Ethirneechal Serial). இந்த தொடரை திருசெல்வம் இயக்கி வருகிறார். பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளையும் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் காண்பிப்பதே இந்த எதிர்நீச்சல் தொடர். இந்த சீரியலில் நடித்து வரும் அனைவரின் கதாபாத்திரமும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. குறிப்பாக மறைந்த நடிகர் மாரிமுத்துக்கு தனி மவுசு என்றே கூறலாம். அதுமட்டுமின்றி எதிர்நீச்சல் சீரியல் பற்றி தான் சின்னத்திரை வட்டாரத்தில் அதிகமாக தற்போது பேசப்பட்டு வருகிறது. இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனாலையே டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியல் மற்ற சீரியல்களை போல இல்லை என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 


மாரிமுத்துக்கு பதில் வேல ராமமூர்த்தி:
இதற்கிடையில் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரமான குணசேகரனாக நடித்துவந்த இயக்குனர், நடிகர் மாரிமுத்து காலமானதை அடுத்து, அவருடைய கதாபாத்திரத்தில் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி அறிமுகம் செய்யப்பட்டார். தற்போது இந்த கதாபாத்திரத்தை ஓரளவு வேலராமமூர்த்தி பூர்த்தி செய்து வருகிறார். 


மேலும் படிக்க | ZEE5 டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு !!


எதிர்நீச்சல் பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பள விவரம்:
இந்நிலையில் சமீபத்தில் இந்த சீரியலில் நடிக்கும் முக்கிய கேரக்டர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஹரிப்பிரியாவுக்கு ஒரு நாளைக்கு 12000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதேபோல் ஈஸ்வரி கேரக்டரில் நடிக்கும் கனிகா வெள்ளி திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்திருக்கிறார், இவருக்கு ஒரு நாளைக்கு 12000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது.


மறுபுறம் சின்னத்திரை தொகுப்பாளனியாக பல வருடங்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் தான் பிரியதர்ஷினி, இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு பத்தாயிரம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதேபோன்று இந்த கதையின் ஹீரோவாக நடிக்கும் சக்தியும் ஒரு நாளைக்கு 10,000 சம்பளமாக வாங்குகிறார்.


அதேபோல், எதிர்நீச்சல் சீரியலின் கரிகாலன் கேரக்டரில் நடிக்கும் நடிகரின் பெயர் விமல் குமார். அவருக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. எதிர்நீச்சல் சீரியலில் இவர் ஒரு மிகப்பெரிய பக்கபலமாக இருந்து வருகிறார் என்றே கூற வேண்டும்.


எதிர்நீச்சல் சீரியலில் முதலில் முக்கியமான கேரக்டராக காட்டப்பட்டது ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதாவை தான். அவருக்கு ஒரு நாளைக்கு சம்பளம் மட்டும் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மறுபுறம்  ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வேல ராமமூர்த்திக்கு மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படுகிறதாம். வேல ராமமூர்த்தியின் இந்த சம்பள விவரத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர். 


எதிர்நீச்சல் சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்:
கனிகா - ரூ 12,000,
காயத்ரி கிருஷ்ணன் - ரூ 6500,
விமல் ராஜ் - ரூ 9000,
சத்யா தேவராஜ் - ரூ 7500,
ரித்திக் ராகவேந்திரா - ரூ 3500,
விபுராமன் - ரூ 12000
ஹரிப்ரியா - ரூ 12,000,
கமலேஷ் - ரூ 10,000,
பிரியதர்ஷினி - ரூ 10,000,
சபரி- ரூ 10,000
மதுமிதா - ரூ 15,000,
சத்யபிரியா- ரூ 12,000


மேலும் படிக்க | இந்த படமும் லிஸ்ட் ல இருக்கா? இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் எது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ