நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு: தமிழ் சினிமா நடிகராக சுற்றி வருபவர் நடிகர் தான் சிலம்பரசன் சிம்பு. இவரின் சொத்து மதிப்பு பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

​நடிகர் சிம்பு:
தமிழ் சினிமாவின்  (Tamil Cinema) முன்னணி நடிகர்களுள் ஒருவர் தான் சிலம்பரசன் சிம்பு (Actor Simbu). நடிகர் சிம்பு, இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமையாளராக விளங்கும் டி.ராஜேந்திரனின் மூத்த மகனாவார். டி.ராஜேந்தர் தான் இயக்கிய திரைப்படத்தில், சிம்புவை ஒரு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். இதை தொடர்ந்து மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், மோனிஷா என் மோனாலிஷா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நடிப்பு மட்டும் இன்றி, சிம்பு ஒரு நடன கலைஞரும் கூட. 


'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிம்பு, தொடந்து தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். மிகவும் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இவர் இணைந்தார். 


மேலும் படிக்க | October 2023: இந்த மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ள மலையாள திரைப்படங்கள்!


சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் செம ஹிட்டானது. இதைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் தரமான வெற்றியை பதிவு செய்தது.



சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்:
நடிகர் சிம்பு (Actor Silambarasan TR)கடைசியாக, ‘பத்து தல’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டெர்னேஷனல் நிறுவனம் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படங்களுடன் சேர்த்து இவர், கொரோனா குமார் படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் சிம்பு கதாநாயகனாக நடிக்க உள்ளார். 



சிம்புவின் சம்பள விவரம்: 
சிம்பு தன்னுடைய முதல் படத்தில், சில லட்சம் மட்டுமே சம்பளமாக பெற்ற நிலையில், தற்போது கடைசியாக மாநாடு படத்தில் 10 கோடி சம்பளம் (Actor Simbu Salary Details) பெற்றார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிக்கும் படங்களுக்கு 20 முதல் 30 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளார் நடிகர் சிம்பு.



சிம்புவின் சொத்து மதிப்பு:
இந்நிலையில் மல்டி டாலெண்ட் ஸ்டாரான நடிகர் சிம்புவின் முழு சொத்து மதிப்பு (Simbu Net Worth) எவ்வளவு என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் முழு சொத்து மதிப்பானது சுமார்  120 கோடி வரை இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு சொகுசு கார், பங்களா என ஏகப்பட்ட சொத்துக்கள் சிம்புவின் பெயரிலேயே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் - திவ்ய பாரதி! அதுவும் இந்த படத்திலா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ